/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தலைவர்கள் படங்களுடன் 'டி சர்ட்'; பின்னலாடை நகரில் தயாராகிறது
/
தலைவர்கள் படங்களுடன் 'டி சர்ட்'; பின்னலாடை நகரில் தயாராகிறது
தலைவர்கள் படங்களுடன் 'டி சர்ட்'; பின்னலாடை நகரில் தயாராகிறது
தலைவர்கள் படங்களுடன் 'டி சர்ட்'; பின்னலாடை நகரில் தயாராகிறது
ADDED : பிப் 14, 2024 11:56 PM
திருப்பூர் : லோக்சபா தேர்தல் நெருங்குவதால், அரசியல் கட்சி தலைவர் படங்கள் அச்சிடப்பட்ட, 'டி-சர்ட்' வாங்குவதற்கான வர்த்தக விசாரணை துவங்கியுள்ளது.
நாட்டு மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும், விளையாட்டு போட்டிகள், விழாக்கள், தேர்தல்கள் வரும் போது, சீருடை போன்ற 'டி-சர்ட்' அணிவது வாடிக்கையாகிவிட்டது. பெயர், முத்திரை அல்லது சின்னங்கள் பிரின்ட் செய்த 'டி-சர்ட்' அணிய வேண்டுமென, தொண்டர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்படுகிறது.
குறிப்பாக, பொது தேர்தல்களின் போது, அரசியல் கட்சி பெயர்களில் 'டி-சர்ட்' தயாரிப்பது அதிகரிக்கும். தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் நடக்கும் பிரசார பயணங்களுக்கு தேவையான, 'டி-சர்ட்'கள், திருப்பூரில் கொள்முதல் செய்யப்படும்.
தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., போன்ற கட்சியினர், மாநிலம் முழுவதும் பயன்படுத்த, திருப்பூர் கட்சியினர் மூலம், ஆர்டர் கொடுத்து தயாரிப்பது வழக்கம். விரைவில், லோக்சபா தேர்தல் அறிவிக்க இருப்பதால், கட்சி பெயர் சின்னங்கள், கொடிகள் மற்றும் தலைவர் படங்கள் பிரின்ட் செய்யப்பட்ட, வெள்ளை, காவி, மஞ்சள் மற்றும் பச்சை நிற 'டி-சர்ட்' கொள்முதலுக்கு முன்னோட்டமாக, விசாரணையை துவக்கியுள்ளனர்.
லோக்சபா தேர்தல் என்றாலும், 234 சட்டசபை தொகுதிகள் வாரியாக பிரசார கூட்டம், தெருமுனை பிரசாரம் மற்றும் தேர்தல் பணி மேற்கொள்ளப்படும். அதற்காக, ஒவ்வொரு கட்சிகளும் தயாராகி வருகின்றன.
கட்சி சின்னம் இடம்பெற்றால், வேட்பாளர் செலவு கணக்கில் சேர்ந்து விடும் என்ற அச்சத்தால், கட்சி கொடி, பெயர் மற்றும் தலைவர் படங்களுடன், 'டி-சர்ட்' மற்றும் தொப்பிகள் தயாரிக்க விரும்புகின்றனர். அதற்காக, திருப்பூரில் உள்ள, பனியன் உற்பத்தியாளர்களிடம் விசாரணையை துவக்கியுள்ளனர்.
பனியன் உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:
அயோத்தி கோவில் கும்பாபிேஷகத்துக்கு, திருப்பூருக்கு குறைவான ஆர்டர் மட்டும் கிடைத்தது. வடமாநில வியாபாரிகள் மொத்தமாக விற்றுவிட்டனர். லோக்சபா தேர்தலுக்கு, மாநிலம் முழுவதும் இருந்து ஆர்டர் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதற்காக, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வினர் விசாரணையை துவக்கியுள்ளனர். சிலர், 'சாம்பிள்' டி-சர்ட் வாங்கி சென்றுள்ளனர். தேர்தல் அறிவித்த பின், கொள்முதல் வேகமெடுக்கும். சிறிய ஆர்டர் கிடைத்தாலும் பரவாயில்லை என, முயற்சி எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

