/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து; 'துாள் கிளப்பிய' சென்சுரி பள்ளி
/
டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து; 'துாள் கிளப்பிய' சென்சுரி பள்ளி
டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து; 'துாள் கிளப்பிய' சென்சுரி பள்ளி
டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து; 'துாள் கிளப்பிய' சென்சுரி பள்ளி
ADDED : ஆக 01, 2025 10:34 PM

திருப்பூர்; சர்க்கார் பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையில், தெற்கு மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் பிரன்ட்லைன் பள்ளியில் நடந்தது. இதில் சென்சுரி பள்ளி மாணவர்கள் அசத்தினர்.
வெற்றிபெற்ற இப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் விவரம்: 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரனேஷ்குமார் முதலிடம்; 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரனேஷ்குமார் - ரோஹன் முதலிடம்; 14 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் மாணவி தஜ்மிளா இரண்டாமிடம்; 17 வயதுக்குட்பட்ட பெண்கள் இரட்டையர் பிரிவில் அஷ்மா பேகம் - மரியம் பாத்திமா இரண்டாமிடம்; 19 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் மதுவர்ஷினி ஆகியோர் இரண்டாமிடம் பெற்றனர். 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் சென்சுரி பள்ளி மாணவியர் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். அதே பிரிவில் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் இரண்டாமிடம் பெற்றனர்.
டேபிள் டென்னிஸ் மற் றும் கூடைப்பந்து போட்டி களில், வெற்றி பெற்ற சென்சுரி பள்ளி மாணவர்களையும், பயிர்சியாளர்கள் குணசீலன், குருவிகாஷ் ஆகியோரையும் பள்ளி தாளாளர் சக்திதேவி, முதல்வர் ெஹப்சிபா பால் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.