sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

டெக்னிக்கல் டெக்ஸ்டைல் தொழில்நுட்பத்தில் 'தைவான்' திருப்பூரை காப்பான்! வர்த்தக இலக்கை எட்டுவதில் முக்கிய முன்னேற்றம்

/

டெக்னிக்கல் டெக்ஸ்டைல் தொழில்நுட்பத்தில் 'தைவான்' திருப்பூரை காப்பான்! வர்த்தக இலக்கை எட்டுவதில் முக்கிய முன்னேற்றம்

டெக்னிக்கல் டெக்ஸ்டைல் தொழில்நுட்பத்தில் 'தைவான்' திருப்பூரை காப்பான்! வர்த்தக இலக்கை எட்டுவதில் முக்கிய முன்னேற்றம்

டெக்னிக்கல் டெக்ஸ்டைல் தொழில்நுட்பத்தில் 'தைவான்' திருப்பூரை காப்பான்! வர்த்தக இலக்கை எட்டுவதில் முக்கிய முன்னேற்றம்


UPDATED : ஜூலை 16, 2025 07:32 AM

ADDED : ஜூலை 15, 2025 10:41 PM

Google News

UPDATED : ஜூலை 16, 2025 07:32 AM ADDED : ஜூலை 15, 2025 10:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; ''பருத்திக்கு மாற்றாக, பாலியஸ்டர் துணி மற்றும் ஆடை உற்பத்திக்கு, புதிய தொழில்நுட்பம் தேவை; தைவான் வாயிலாக அதனை பெறலாம்,'' என, இந்திய தொழிற்கூட்டமைப்பு, ஜவுளிப்பிரிவு கன்வீனர் கோபிகுமார் தெரிவித்துள்ளார்.

உலக அளவில், செயற்கை நுாலிழை ஆடை, விளையாட்டு மற்றும் தொழில்நுட்ப ஆடை உற்பத்தியில், தைவான் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை மேம்படுத்த, தமிழக அரசு மற்றும் தைவான் நாட்டு அமைப்புகள் இணைந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

செயற்கை நுாலிழை தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்தது. செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி துணை குழு தலைவர் அருண்ராமசாமி, துணை தலைவர் சுனில்குமார் முன்னிலை வகித்தனர்.

இணை செயலாளர் குமார் துரைசாமி, திருப்பூரின் உற்பத்தி படிநிலைகளை விளக்கி பேசியதாவது:

திருப்பூரில் முதன்முறையாக, கடந்தாண்டு, 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக ஏற்றுமதி நடந்துள்ளது; நடப்பாண்டில், 15 முதல், 20 சதவீத வளர்ச்சி கிடைக்கும். கொரோனாவுக்கு பிறகு, திருப்பூருக்கு பெரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. பிரிட்டனுடனான வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதால், இந்திய ஏற்றுமதி, 10 முதல், 15 சதவீதம் உயர வாய்ப்புள்ளது. விரைவில், ஐரோப்பியாவுடன் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும். அமெரிக்கா, இந்தியாவை நட்பு நாடாக பாவித்து, குறைந்த வரிவிதிக்க இருக்கிறது.

பருத்தி ஆடைகளை மட்டுமே நம்பியிருந்தால், திருப்பூர் ஏற்றுமதியாளர் அடுத்த கட்டத்துக்கு உயர முடியாது; அதற்கான சாத்தியமும் மிகக்குறைவு. உலக அளவில் பருத்தி உற்பத்தி அதிகரித்தாலும், இந்தியாவில், பருத்தி உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருகிறது.

குளிர்கால ஆடை, விளையாட்டு ஆடை, 'ஆக்டிவ்' ஆடை உற்பத்தியில், திருப்பூர் பின்தங்கியிருக்கிறது. திருப்பூரின் ஒவ்வொரு நிறுவனமும், 20 சதவீதம் அளவுக்கு செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி செய்ய வேண்டும் என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது; அதற்கான வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது.

தைவான், ஆயத்த ஆடை உற்பத்திக்கு, பல்வேறு நாடுகளில் முதலீடு செய்துள்ளது. இந்தியாவிலும் முதலீட்டை எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில், குறிப்பாக திருப்பூரில் தொழிற்சாலை அமைத்தால், வர்த்தக வாய்ப்பு விரிவாகும். அடுத்து வரும் ஆண்டுகளில், 25 முதல், 30 சதவீதம் அளவுக்கு செயற்கை நுாலிழை உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்தியாவை நோக்கி வருகின்றனர்...


கோவை மற்றும் திருப்பூரில், தைவான் நாட்டு அமைப்பினர், தொழில்துறையினர் பங்கேற்கும் கருத்தரங்கு, 21ம் தேதி கோவை 'லீ மெரீடியன்' ஓட்டலிலும், 22ம் தேதி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்திலும் நடக்க உள்ளது. தைவான் மிகச்சிறிய நாடு. 30 பில்லியன் டாலர் அளவுக்கு ஜவுளி வர்த்தகம் செய்து வருகிறது. இருப்பினும், புத்தாக்க தொழில்நுட்பம் கண்டறிவதில் முன்னோடியாக இருக்கின்றனர்.

அனைத்து காலநிலைக்கும் ஏற்ற, மதிப்பு கூட்டப்பட்ட பாலியஸ்டர் ஆடை உற்பத்தியில், தைவான் முன்னணியில் இருக்கிறது. விளையாட்டு ஆடைகள், தொழில்நுட்ப ஆடைகளில், உலக அளவில் தைவான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தோனேசியா, கம்போடியா, சீனா போன்ற நாடுகளில், தைவான் அதிகம் முதலீடு செய்துள்ளது; தற்போது இந்தியாவை நோக்கி வருகின்றனர்.

இந்தியாவில், பருத்திக்கு பதிலாக பாலியஸ்டர் துணி மற்றும் ஆடை உற்பத்திக்கு, புதிய தொழில்நுட்பம் தேவை. தைவான் வாயிலாக, பாலியஸ்டர் உற்பத்தி இயந்திரங்களை பெறலாம். சாயமிடும் தொழில்நுட்பமும் நமக்கு கிடைக்கும்.

- கன்வீனர் கோபிகுமார், ஜவுளிப்பிரிவு, தமிழக தொழிலாளர்கூட்டமைப்பு.






      Dinamalar
      Follow us