/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்தையை கொஞ்சம்தான் எட்டிப்பாருங்க! நகராட்சி மீது பொதுமக்கள் அதிருப்தி
/
சந்தையை கொஞ்சம்தான் எட்டிப்பாருங்க! நகராட்சி மீது பொதுமக்கள் அதிருப்தி
சந்தையை கொஞ்சம்தான் எட்டிப்பாருங்க! நகராட்சி மீது பொதுமக்கள் அதிருப்தி
சந்தையை கொஞ்சம்தான் எட்டிப்பாருங்க! நகராட்சி மீது பொதுமக்கள் அதிருப்தி
ADDED : அக் 13, 2024 10:13 PM

உடுமலை : நகராட்சி சந்தையில், கடைகள் கட்டும் பணிகள் இழுபறியாக நடக்கும் நிலையில், மழையால், சேறும் சகதியுமாக வளாகம் மாறி, அனைத்து தரப்பினரும் பாதித்து வருகின்றனர்.
உடுமலை நகராட்சி சந்தை வளாகம், 16.14 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. நாள்தோறும், 150 முதல் 700 டன் வரை சந்தைக்கு காய்கறி வரத்து உள்ளது. தக்காளி வர்த்தகத்தின் முக்கிய மையமாக உடுமலை சந்தை உள்ளது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்லும் சந்தையில், அடிப்படை வசதிகள் கூட மேம்படுத்தப்படாமல் உள்ளது.
விளைபொருட்களை விற்பனை செய்ய பல மணி நேரம் காத்திருக்கும் விவசாயிகளுக்கு குடிநீர் வசதியில்லை; கழிப்பிடமும் இல்லாததால், விவசாயிகள் வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.
சந்தை மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்தும், பணிகள் இழுபறியாக நடந்து வருகிறது. வளாகத்தின் ஒரு பகுதியில் பழைய கடைகள் இடித்து அகற்றப்பட்டது; புதிய கடைகள் கட்டும் பணி, பல ஆண்டுகளாக நிறைவு பெறாமல் உள்ளது.
இதனால், வளாகத்தில் வாகனங்களை நிறுத்த இடவசதியில்லாதது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், வளாகத்தில், ரோடு போடும் பணிகளும் நடைபெறவில்லை.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், வளாகம் முழுவதும் சேறும், சகதியுமாக மாறி, அனைத்து தரப்பினரும் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது.
அரசு நிதி ஒதுக்கீடு மற்றும் ஏலம் வாயிலாக நகராட்சிக்கு வருவாய் கிடைத்தாலும், சந்தையை அந்நிர்வாகத்தினர் கண்டுகொள்வதில்லை.
இதனால், பல ஆயிரம் விவசாயிகள், மாற்றுச்சந்தையை நோக்கி இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.