/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழ் தேர்வு எளிதானது; மாணவர்கள் மகிழ்ச்சி ஆரம்பமே அசத்தல்
/
தமிழ் தேர்வு எளிதானது; மாணவர்கள் மகிழ்ச்சி ஆரம்பமே அசத்தல்
தமிழ் தேர்வு எளிதானது; மாணவர்கள் மகிழ்ச்சி ஆரம்பமே அசத்தல்
தமிழ் தேர்வு எளிதானது; மாணவர்கள் மகிழ்ச்சி ஆரம்பமே அசத்தல்
ADDED : மார் 02, 2024 01:29 AM

திருப்பூர்;'பிளஸ் 2 தமிழ்த்தேர்வு மிக எளிமையாக இருந்தது. 'சென்டம்' வாங்குவோம் என, தேர்வெழுதிய மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில், 92 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. தமிழ் தேர்வெழுத, 23 ஆயிரத்து, 636 மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது; நேற்றைய தேர்வுக்கு, 174 பேர் வரவில்லை; 23 ஆயிரத்து, 462 பேர் தேர்வெழுதினர்.
மாவட்டத்தில், 225 தனித்தேர்வர்களில், 203 பேர் தேர்வெழுதினர். தமிழ் தவிர்த்த பிற மொழி பாடம் பிரிவில், பிரெஞ்சு தேர்வெழுத, 367 பேரில், 2 பேர் 'ஆப்சென்ட்'. ஹிந்தி, அரபிக் தேர்வை தலா, ஐந்து பேர் எழுதினர்.
திருப்பூர் மாவட்ட தேர்வு நடத்தும் அலுவலர், ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் ஆனந்தி தாராபுரம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தினர். கலெக்டர் கிறிஸ்துராஜ் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இருதேர்வு மையங்களில் ஆய்வு நடத்தினார். முதன்மை கல்வி அலுவலர் கீதாவிடம் தேர்வு பணி குறித்து கேட்டறிந்தார்.
முன்னதாக தேர்வறைக்குள் சென்ற கலெக்டர், சி.இ.ஓ., மற்றும் ஆசிரியர்களிடம்,' தேர்வு மையமும், தேர்வறையும் அமைதியாக இருக்க வேண்டும்; சத்தம் போடாதீங்க. நான் உள்ளே வந்து பார்த்துட்டு, வந்துடுறேன். தேர்வெழுதுபவருக்கு இடையூறு செய்யக்கூடாது,' என்றார். பத்து நிமிடத்தில் ஆய்வு முடித்து விட்டு கிளம்பினார்.
தமிழ் தேர்வு குறித்து, மாணவ, மாணவியர் சிலரின் கருத்து:
'சென்டம்' நிச்சயம்
ஒரு மதிப்பெண், இரண்டு மற்றும், நான்கு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. ஏற்கனவே திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளே இடம் பெற்றிருந்தால், அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க முடிந்தது. 95க்கு மேல் மதிப்பெண் பெற முடியும்.
- யமுனா
எளிமையாக இருந்தது
வினாத்தாள் அனைத்து கேள்விகளும் எளிதில் விடைஎழுதும் வகையில் எளிமையாக கேட்கப்பட்டிருந்தது மனப்பாடம், தமிழாக்கம் பகுதிகளுக்கு அப்படியே விடையளிக்க முடிந்தது. ஏற்கனவே பதில் அளித்து பயிற்சி பெற்ற கேள்விகள் என்பதால், 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற முடியும்.
- அமிர்தா
நல்ல மதிப்பெண்
பெரும்பாலும், தெரிந்த கேள்விகள், பலமுறை விடையளித்தவை என்பதால், குறிப்பிட்ட நேரத்துக்குள் அனைத்து கேள்வி களும் விடையளித்துள்ளேன். ஒரு மதிப்பெண் முழுமையாக எழுத முடிந்தது. தமிழில் 'சென் டம்' வாங்க முடியும்.
- பாலாஜி
நெடுவினா எளிது
புத்தகத்துக்குள் இருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை. புத்தகத்துக்கு பின் இருந்து தான் அனைத்து கேள்விகளும் கேட்கப்பட்டது. ஒன்று, இரண்டு, நெடுவினா பகுதிகளுக்கு முழுமையாக விடையளித்து விட்டேன். யோசித்து எழுதும் வகையில், வினாத்தாள் இல்லை. அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
- அருள்முருகன்
தேர்ச்சி அதிகரிக்கும்
தமிழில், 14 ஒரு மதிப்பெண், 12 இரு மதிப்பெண், நான்கு மதிப்பெண் ஏழு, ஆறு மதிப்பெண் நான்கு என அனைத்து மதிப்பெண்ணுக்குரிய கேள்விகளும் எளிமையாகவே இருந்தது.
எந்த ஒரு மாணவரும் எளிதில் விடையெழுதும் வகையில், வினாத்தாள் அமைந்தது. காலாண்டுக்குரிய பாடத்தைசரிவர படித்திருந்தாலேஎளிதில் விடையளித்திருக்க முடியும்.
அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்து விடுவர் தமிழில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும். சென்டம் கிடைக்க வாய்ப்புள்ளது.
- பரந்தாமன், தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,பொல்லிக்காளிபாளையம்.

