/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம்; தி.மு.க.,வினர் துவக்கினர்
/
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம்; தி.மு.க.,வினர் துவக்கினர்
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம்; தி.மு.க.,வினர் துவக்கினர்
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம்; தி.மு.க.,வினர் துவக்கினர்
ADDED : ஜூலை 04, 2025 12:49 AM
திருப்பூர்; 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் நேற்று திருப்பூரில் தி.மு.க.,வினர் உறுப்பினர் சேர்க்கையை துவக்கியுள்ளனர். முதல்கட்டமாக தி.மு.க., ஆதரவு நிலையில் உள்ளவர்களைத் தேர்வு செய்தே, நிர்வாகிகள் அவர்களது வீடுகளுக்குச் சென்றனர்.
'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையை தமிழகம் முழுவதும் தி.மு.க., வினர் நேற்று துவங்கினர். அனைத்து பூத்களிலும் உள்ள வாக்காளர் எண்ணிக்கையில் குறைந்த பட்சம் 30 சதவீதம் பேரை புதிதாக கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மத்திய மாவட்டத்தில் தெற்கு தொகுதியில் எம்.எல்.ஏ., செல்வராஜ் இதனை துவக்கி வைத்தார். வடக்கு மற்றும் அவிநாசி தொகுதியில் மேயர் தினேஷ்குமார் இதை துவக்கி வைத்தார்.
பூத் கமிட்டி நிர்வாகிகள் ஏற்கனவே, தங்கள் பகுதியில் உள்ள வீடுகள் குறித்த விவரங்களை சேகரித்து வைத்துள்ளனர். முதல் கட்டமாக பெரும்பாலும் தி.மு.க., ஆதரவு நிலையில் உள்ளவர்களைச் சந்தித்து இதை துவங்கியுள்ளனர். அடுத்தடுத்து பிற கட்சி ஆதரவு நிலை மற்றும் ஆளும் கட்சியின் எதிர்ப்பு நிலையில் உள்ளவர்களை சந்திக்க உள்ளனர்.