/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் எழுத்தாளருக்கு தமிழக அரசு விருது
/
திருப்பூர் எழுத்தாளருக்கு தமிழக அரசு விருது
ADDED : பிப் 22, 2024 05:14 AM
உடுமலை: தமிழ் மொழியின் வளர்ச்சியை முன்னிறுத்தி செயல்படும் சங்கங்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த, 2022ம் ஆண்டுக்கான விருதுகள், தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், சிறந்த மொழிப் பெயர்ப்பாளருக்கான விருது, மாநிலத்தில், 10 பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில், திருப்பூரைச் சேர்ந்த சுப்ரபாரதி மணியனும் ஒருவர். அவருக்கு சான்றிதழுடன், 2 லட்சம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட இருக்கிறது.
எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் கூறுகையில், ''எனது பல சிறுகதைகள், பல இந்திய மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. 5 நாவல்கள் ஹிந்தியிலும், 9 நாவல்கள் ஆங்கிலம், 5 நாவல் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. சமீப ஆண்டுகளாக மொழி பெயர்ப்பு நுால்களுக்கு வாசகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்திருக்கிறது,'' என்றார்.