sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நாளை தமிழ்ப்புத்தாண்டு முக்கனி விற்பனை ஜோர்

/

நாளை தமிழ்ப்புத்தாண்டு முக்கனி விற்பனை ஜோர்

நாளை தமிழ்ப்புத்தாண்டு முக்கனி விற்பனை ஜோர்

நாளை தமிழ்ப்புத்தாண்டு முக்கனி விற்பனை ஜோர்


ADDED : ஏப் 12, 2025 11:20 PM

Google News

ADDED : ஏப் 12, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'விசுவாவசு' தமிழ்ப்புத்தாண்டு நாளை பிறக்கிறது. திருப்பூர் மார்க்கெட்டில், முக்கனிகள் உட்பட பழவகைகள் விற்பனை நேற்றே களைகட்டியது.

குரோதி ஆண்டு முடிந்து, 'விசுவாவசு' என்ற தமிழ்ப்புத்தாண்டு நாளை பிறக்கிறது. சித்திரைக்கனியை கொண்டாட, இன்று இரவே, வீட்டு பூஜை அறையில், பழத்தட்டு அலங்கரித்து வைப்பர். பெரிய தட்டில் தலைவாழை இலை வைத்து, அதன்மீது, மா, பலா, வாழை ஆகிய முக்கனி மற்றும் பிறகனி வகைகள், வெற்றிலை பாக்கு, மலர்வகைகள் வைக்கப்படும். தங்க நகைகள், ரூபாய் நோட்டுகள் வைத்து, அதன் அருகில், முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கப்படும். குறிப்பாக, பழத்தட்டின் மீது, மஞ்சள் சரக்கொன்றை மலர் அலங்கரித்து வைக்கப்படும். நாளை கண் விழித்ததும், கனிவகைகளை, அருகே உள்ள கண்ணாடி வழியாக கண்டு, வழிபட்டு, புத்தாண்டை வரவேற்க பலர் தயாராகி விட்டனர்.

குவிந்த பழங்கள்

இதற்காக, திருப்பூர் மார்க்கெட் மற்றும் பழக்கடைகளில், நேற்றிருந்தே பக்தர்கள், சித்திரை கனிக்காக, பழங்களை வாங்க துவங்கினர். பழ வியாபாரிகள், பல்வகை பழ வகைகளை, அழகாக அடுக்கி வைத்திருந்தனர். மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை, திராட்சை, கொய்யா, சப்போட்டா, அன்னாசி ஆகிய பழங்கள் விற்கப்பட்டன. குறிப்பாக, சித்திரைக்கனி ஸ்பெஷலான, மஞ்சள் வெள்ளரிப்பழத்தை தேடித்தேடி வாங்கினர். அத்துடன், மரநெல்லி, வெற்றிலை பாக்கு, சிலவகை மலர்களையும் வாங்கினர்.

விலை உயர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து, பலாப்பழங்கள், லாரிகளில் திருப்பூர் கொண்டு வரப்பட்டிருந்தன. தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு, பழவகைகளின் விலை நேற்று உயர்ந்திருந்தது. மாம்பழம் கிலோ -240 ரூபாய், பலாச்சுளை - கிலோ 200 - பலாப்பழம் கிலோ -100, வாழைப்பழம் ஒரு டஜன் - 70 முதல், 100 வரை விற்கப்பட்டது.

ஆப்பிள் கிலோ -260 முதல் 340 ரூபாய், ஆரஞ்சு -280 ரூபாய், கமலா ஆரஞ்ச் -180 , மாதுளை - 280 முதல், 320 ரூபாய், சாத்துக்குடி -160, திராட்சை 200 முதல், 240 ரூபாய், வெள்ளரிப்பழம், கிலோ 100 ரூபாய், எலுமிச்சம்பழம் -5 முதல் 10 ரூபாய், அன்னாசிப்பழம் -100 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்பட்டது. சித்திரைக்கனி வழிபாட்டுக்கு, முக்கனிகள் அவசியம்; அத்துடன், ஒரு சில பழ வகைகள் மட்டும் தலா ஒன்று அல்லது இரண்டு என, மக்கள் வாங்கிச்சென்றனர்.

---

தமிழ்ப்புத்தாண்டு நாளை பிறக்கிறது. சித்திரைக்கனி கொண்டாட திருப்பூரில் பழங்கள் விற்பனை நேற்றே களைகட்டியது.

கே.எஸ்.சி., பள்ளி சாலையில், விற்பனைக்காக குவிந்துள்ள பலாப்பழங்கள்

பெருமாள் கோவில் வீதியில், ஒரு கடையில் பலவகை பழங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

---

திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூ விற்பனை மும்முரமாக நடந்தது.

பூ விற்பனை களைகட்டியது

வீடுகளில் மட்டுமின்றி, கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், தீர்த்தக்குட ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், வழிபாடுகளும் நடைபெறும். பூக்கள் விலையும் நேற்று உயர்ந்திருந்தது. திருப்பூர் பூ மார்க்கெட்டில், மக்கள் நேற்று முதல் பூக்கள் வாங்கி செல்ல துவங்கினர். நேற்றைய நிலவரப்படி, செவ்வந்தி கிலோ -120 ரூபாய், மல்லிகை -800, முல்லை -600 ரூபாய், சம்பங்கி -240 ரூபாய், செண்டு மல்லி கிலோ -60, செவ்வரளி - 400 ரூபாய், கோழிக்கொண்டை பூ கிலோ 60 ரூபாய், மருகு ஒரு கட்டு, 20 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்பட்டது.








      Dinamalar
      Follow us