/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழ் சமுதாயம் திருந்தியபாடில்லை! ஊராட்சி தலைவருக்கான பாராட்டு விழாவில் வேதனை

ADDED : ஜன 12, 2025 02:16 AM

பொங்கலுார்: மூன்று முறை கண்டியன் கோவில் ஊராட்சி தலைவர், பி.ஏ.பி., முன்னாள் திட்ட குழு உறுப்பினர், விவசாய சங்க முன்னாள் பொங்கலுார் வட்டார தலைவர் பதவி வகித்த கோபாலுக்கு பொது வாழ்வில் பொன்விழா கண்டியன் கோவிலில் நடந்தது.
திருப்பூர் தெற்கு ரோட்டரி மற்றும் கண்டியன் கோவில் கிராம பொதுமக்கள் இணைந்து நடத்திய இவ்விழாவுக்கு, தொடக்க வேளாண் கூட்டுறவு முன்னாள் சங்க தலைவர் சிவசுப்பிரமணியம் வரவேற்றார்.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கோவை கவுமார மடாலயம் ராமானந்த குமரகுருபர சுவாமி, பி.ஏ.பி., முன்னாள் தலைமை பொறியாளர் முத்துசாமி, முன்னாள் டி.எஸ்.பி., கோவிந்தராஜ், முன்னாள் ஏ.டி.எஸ்.பி., முத்துசாமி, திருப்பூர் தெற்கு ரோட்டரி தலைவர் மோகனசுந்தரம், தாராபுரம் ரோட்டரி தலைவர் முத்துராமலிங்கம், ஜல்லிக்கட்டு தலைவர் பழனிசாமி, பி.ஏ.பி., திட்ட குழு தலைவர் பரமசிவம், ஜெய் ஸ்ரீ ராம் கல்லுாரி தலைவர் கோவிந்தசாமி, ஜெய் ஸ்ரீ ராம் மெட்ரிக் பள்ளி தலைவர் தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்குஅன்னதானம் வழங்கப்பட்டது.