ADDED : மார் 07, 2024 04:15 AM

அனுப்பர்பாளையம், : திருப்பூர் மாநகராட்சி, இரண்டாவது மண்டலம், 7வது வார்டு நஞ்சப்பா நகரில் இருந்து, பாரதி நகர் செல்லும் ரோடு மாநகராட்சி சார்பில், புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ரோட்டின் நடுவில் ஒரு மின் கம்பம் உள்ளது. மின் கம்பத்தை அகற்றாமலேயே மாநகராட்சி அதிகாரிகள் ரோடு போட்டுள்ளனர். இதனால் விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
இது, போயம்பாளையத்தையும், எம்.எஸ்., நகரையும் இணைக்கும் பிரதான சாலை. இந்த ரோட்டில் அதிக பனியன் நிறுவனங்கள் உள்ளன. அதிக அளவில் சரக்கு வாகனங்கள் செல்ல கூடிய ரோடு. பனியன் நிறுவனங்களுக்கு அதிக தொழிலாளர்கள் வேலைக்கு பைக்கில் செல்வர்.
மின் கம்பம் ரோட்டின் மத்தியில் அமைந்துள்ளதால், இரவு நேரத்தில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கம்பத்தை கூட அகற்றாமல் ரோடு போட்டது; மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தன போக்கை காட்டுகிறது. விபத்தால் உயிர் சேதம் ஏற்படுமுன் மாநகராட்சி அதிகாரிகள் மின் கம்பத்தை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

