/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொட்டுவிடும் துாரத்தில் இலக்கு; பசுமைப் பயணம் படுவேகம்
/
தொட்டுவிடும் துாரத்தில் இலக்கு; பசுமைப் பயணம் படுவேகம்
தொட்டுவிடும் துாரத்தில் இலக்கு; பசுமைப் பயணம் படுவேகம்
தொட்டுவிடும் துாரத்தில் இலக்கு; பசுமைப் பயணம் படுவேகம்
ADDED : நவ 21, 2024 11:56 PM

திருப்பூர் ; மூன்று லட்சம் மரக் கன்றுகள் நடுவதற்கான இலக்குடன், கடந்த மார்ச் மாதம், வனத்துக்குள் திருப்பூர் திட்டம் - 10 பயணம் துவக்கப்பட்டது. இதுவரை, மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 33 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இலக்கை விரைந்து எட்டும் வகையில், மாவட்டம் முழுவதும் தினந்தோறும் மரக்கன்றுகள் நடப்பட்டுவருகின்றன. காலியிடங்கள், விவசாய நிலங்கள், மானாவாரி நிலங்களில் மரக்கன்று நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று, வெள்ள கோவிலை சேர்ந்த பழனிசாமிக்கு சொந்தமான தொட்டம்பாளை யத்திலுள்ள நிலத்தில் நேற்று, 325 மகோகனி மரக்கன்றுகள் நடப்பட்டன.
வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.