/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டாஸ்மாக் பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக் பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 10, 2025 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், கால முறை ஊதியம், பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து டாஸ்மாக் மதுக் கடைகளில் பணியாற்றும் ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாவட்ட தலை நகரங்களில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அவ்வகையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயல் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் உத்திரகுமார், தலைவர் சதீஷ்குமார், பொருளாளர் சிவானந்தம் உள்ளிட்டோர் பேசினர்.இதில் கலந்து கொண்ட டாஸ்மாக் ஊழியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.