/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெருமாநல்லுாருக்கு 'டாட்டா' தனியார் பஸ்கள் சிறைபிடிப்பு
/
பெருமாநல்லுாருக்கு 'டாட்டா' தனியார் பஸ்கள் சிறைபிடிப்பு
பெருமாநல்லுாருக்கு 'டாட்டா' தனியார் பஸ்கள் சிறைபிடிப்பு
பெருமாநல்லுாருக்கு 'டாட்டா' தனியார் பஸ்கள் சிறைபிடிப்பு
ADDED : பிப் 10, 2025 07:38 AM

அனுப்பர்பாளையம் :   கோவை - ஈரோடு தனியார் பஸ்கள் பெருமாநல்லுாருக்குள் வராமல், தேசிய நெடுஞ்சாலை வழியாகவே சென்று விடுகின்றன. இப்பகுதி மாணவர்கள், தொழிலாளர்கள் பலர், பெருந்துறை, ஈரோடு, அவிநாசி, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு படிக்கவும், வேலைக்காகவும் செல்கின்றனர். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் கல்விக்கூடங்களுக்கோ, பணிக்கோ செல்ல முடியாத நிலை உள்ளது. அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
ஆவேசம் அடைந்த பொது மக்கள் நேற்று காலை பெருமாநல்லுார் அடுத்த முட்டியங்கிணறு அருகே தனியார் பஸ்களை சிறைபிடித்தனர்.  அவிநாசி வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் குமரன், பெருமாநல்லுார் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்வேஸ்வரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.  பெருமாநல்லுாருக்கு வராமல் சென்றால், அபராதம் விதிப்பதுடன்  உரிமம் ரத்தாகும் என்று தனியார் பஸ்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

