ADDED : பிப் 17, 2024 01:30 AM
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் அறிக்கை:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வசூலிக்கப்படும் சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலியிட வரி, தொழில் வரி, திடக்கழிவு மேலாண்மைக் கட்டணம் ஆகியன ஏராளமாக நிலுவையில் உள்ளன.
வரி செலுத்துவோர் வசதிக்காக கணினி வரி வசூல் மையம், மண்டல வரி வசூல் மையங்கள், குமரன் வணிக வளாக மையம், மண்ணரை, செட்டி பாளையம், தொட்டி பாளையம், முருகம்பாளையம், வீரபாண்டி ஆகிய வசூல் மையங்களில் ரொக்கம் மற்றும் கமிஷனர் பெயரில் காசோலையாகவும் வரியினங்கள் செலுத்தலாம்.மேலும் இணையதள வாயிலாக ஆன்லைன் முறையில் வரி செலுத்தவும் வரி வசூல் மையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வரி வசூல் மையங்கள் வரி செலுத்துவோர் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.