/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சிகளில் வரி வசூல்; விரைவுபடுத்த உத்தரவு
/
ஊராட்சிகளில் வரி வசூல்; விரைவுபடுத்த உத்தரவு
ADDED : ஏப் 24, 2025 06:35 AM
திருப்பூர்; 'கிராம ஊராட்சிகளில், 90 சதவீதம் வீட்டு வரி வசூல் செய்ய வேண்டும்' என ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கிராம ஊராட்சிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பல்வேறு இனங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். குறிப்பாக, 15வது நிதிக்குழு மானியம், வேலை உறுதியளிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியும் நிறுத்தப்பட்டிருக்கிறது.
வீட்டு வரி, தொழில் வரி உள்ளிட்ட வரியினங்கள் வாயிலாக, நிதி ஆதாரத்தை ஊராட்சி நிர்வாகங்கள் பெருக்கிக் கொள்ள வேண்டிய சூழலில், இம்மாத இறுதிக்குள், வீட்டு வரி வசூல், 90 சதவீதம் நிறைவு செய்யப்பட வேண்டும்; மாவட்ட அளவில் திருப்பூர், பொங்கலுார், அவிநாசி ஒன்றியங்களில், வரி வசூல் குறைந்திருக்கிறது; வரி வசூலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

