/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வரி உயர்வை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்'
/
'வரி உயர்வை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்'
ADDED : ஆக 03, 2025 10:19 PM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகர் மாவட்ட ஜெ., பேரவை சார்பில், தெருமுனை பிரசாரம் பி.என்.ரோடு மேட்டுபாளையம் பஸ் ஸ்டாப் அருகில் நடந்தது.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன், தலைமை வகித்தார். வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னிலை வகித்தார்.
மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது :
மாநகராட்சியில் உயர்த்தப்பட்டு இருக்கிற வீட்டு வரி, குப்பை வரி, குடிநீர் வரி போன்றவற்றால், மக்கள் பாதிப்படைவது குறித்து நம் கட்சியினர்வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து கூற வேண்டும்.
பொதுச்செயலர் பழனிசாமி விரைவில் திருப்பூர் வர உள்ளார். அவரை வடக்கு தொகுதியில் இருந்து, ஒரு லட்சம் பேர் வரவேற்க வேண்டும்.
நிர்வாகிகள் அனைவரும் ஒன்றாக சேர்த்து, வீடு வீடாக சென்று பழனிசாமியை காண மக்களை அழைத்து வர வேண்டும்.
தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.