/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரிசர்வ் சைட்டில் கட்டிய வீடு வரி விதிப்பு, குடிநீர் இணைப்பு தாராளம்
/
ரிசர்வ் சைட்டில் கட்டிய வீடு வரி விதிப்பு, குடிநீர் இணைப்பு தாராளம்
ரிசர்வ் சைட்டில் கட்டிய வீடு வரி விதிப்பு, குடிநீர் இணைப்பு தாராளம்
ரிசர்வ் சைட்டில் கட்டிய வீடு வரி விதிப்பு, குடிநீர் இணைப்பு தாராளம்
ADDED : பிப் 14, 2024 12:39 AM
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி, மண்ணரை பகுதியில் ரிசர்வ் சைட் என இருந்த இடத்தில் வீடு கட்டப்பட்டுள்ளது. அந்த வீடுகளுக்கு வரி விதிப்பு, குடிநீர் இணைப்பு வழங்கிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, மண்ணரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பத்மநாபன் கூறியதாவது:
திருப்பூர் மாநகராட்சி, 34வது வார்டு மண்ணரை பகுதியில், சக்தி நகர் குடியிருப்பு பகுதி உள்ளது. கடந்த 1980ம் ஆண்டில், நகராட்சி நகர அமைப்பு பிரிவில் இந்த மனைப் பிரிவு அங்கீகாரம் பெறப்பட்டது. 21 வீட்டு மனைகள் மட்டுமே அப்ரூவல் பெறப்பட்டு, பொது பயன்பாட்டுக்கான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை கடந்த, 2007ல் மனை எண் 28,29 மற்றும் 30 என மூன்று மனைகளாகப் பிரித்து ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அந்த இடம் மொத்தம், 7 ஆயிரம் சதுரடி பரப்பில் உள்ளது. இதனை வாங்கியவர், தற்போது, நான்கு மாடிகளில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இதற்கு மிக குறைந்த அளவு வீட்டு வரி விதிக்கப்பட்டுள்ளதோடு குழாய் இணைப்பும் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகத்துக்கு இது குறித்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து மாநகராட்சி, 3வது மண்டல உதவி கமிஷனர் வினோத் கூறியதாவது:
இந்தப்புகார் குறித்து துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டட உரிமையாளருக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அவர் தரப்பில் அளிக்கப்படும் ஆவணங்கள் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உரிய கால அவகாசத்துக்குள், அவர் தரப்பு பதில் பெறப்படவில்லை எனில், நகராட்சி சட்ட விதிகளின் படி அடுத்த கட்ட நடவடிக்கை கமிஷனர் உத்தரவுப்படி மேற்கொள்ளப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.

