/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி இடைநிற்றல் மாணவர்களுக்கு ஆசிரியர் பயிற்றுனர்கள் விழிப்புணர்வு
/
பள்ளி இடைநிற்றல் மாணவர்களுக்கு ஆசிரியர் பயிற்றுனர்கள் விழிப்புணர்வு
பள்ளி இடைநிற்றல் மாணவர்களுக்கு ஆசிரியர் பயிற்றுனர்கள் விழிப்புணர்வு
பள்ளி இடைநிற்றல் மாணவர்களுக்கு ஆசிரியர் பயிற்றுனர்கள் விழிப்புணர்வு
ADDED : மே 15, 2025 11:31 PM
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதியில் பள்ளி இடைநிற்றல் மாணவர்களை, ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மாநில அரசின், உயர் கல்வி வழிகாட்டுதல் திட்டத்தின் கீழ், பள்ளி கல்வி இடைநிற்றல் உள்ள மாணவர்களுக்கு முழுமையான கல்வி அளிக்கும் வகையில், பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, உயர்கல்விக்கான உதவிகள் வழங்குவது, பத்தாம் வகுப்பு நிறைவு செய்வோருக்கு அடுத்தகட்ட சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதற்கென, வட்டாரம், மாவட்ட அளவில் கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளிவர உள்ளன.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு எழுதாதவர்களின் பட்டியல் ஒவ்வொரு வட்டார அளவிலும் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, உடுமலை, குடிமங்கலம் பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் தேர்வு எழுதாத மாணவர்கள், தேர்ச்சி பெறாதவர்களை நேரடியாக சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த துவங்கியுள்ளனர்.
ஆசிரியர் பயிற்றுனர்கள் கூறுகையில், 'பத்தாம் வகுப்பு தேர்வில் 'ஆப்சென்ட்' ஆனவர்கள் மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களை சந்தித்து, மறுதேர்வு எழுதுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டை விட நடப்பாண்டில், இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது,' என்றனர்.