/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பணி நிறைவு ஆசிரியர்கள் கூட்டமைப்பு முப்பெரும் விழா
/
பணி நிறைவு ஆசிரியர்கள் கூட்டமைப்பு முப்பெரும் விழா
பணி நிறைவு ஆசிரியர்கள் கூட்டமைப்பு முப்பெரும் விழா
பணி நிறைவு ஆசிரியர்கள் கூட்டமைப்பு முப்பெரும் விழா
ADDED : அக் 14, 2025 11:46 PM

அவிநாசி; அவிநாசி பழனியப்பா பள்ளியில், அவிநாசி பணி நிறைவு ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில், காந்தி ஜெயந்தி விழா, மூத்தோர் தின விழா, 75 வயது நிறைவு பெற்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
மாதேஸ்வரி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். வட்டாரத் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தார்.
வட்டாரத் துணைத் தலைவர் பழனிசாமி வரவேற்றார். வட்டார செயலாளர் அருணாச்சலம் ஆண்டறிக்கை வாசித்தார். 75 வயது நிறைவு பெற்ற பணி நிறைவு ஆசிரியர்களுக்கு பழனியப்பா பள்ளி தாளாளர் ராஜ்குமார் சால்வை அணிவித்து பாராட்டி பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
அவிநாசி கருவூல உதவி அலுவலர் கந்தசாமி, தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க கோவை மண்டல செயலாளர் அந்தோணிசாமி, மாவட்ட தலைவர் சென்னியப்பன், அவிநாசி உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் கல்வி அறக்கட்டளை செயலாளர் ராயப்பன், அவிநாசி கம்பன் கழக செயல் தலைவர் பழனிசாமி, தமிழர் பண்பாடு கலாசார பேரவை அறக்கட்டளை தலைவர் நடராஜன், தமிழ்ச் சங்க தலைவர் கணேசன், மெய்ஞானமூர்த்தி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். மாநில தலைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினர்.