/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளியில் ஆசிரியை படுகொலை; ஆசிரியர் சங்கத்தினர் கண்டனம்
/
பள்ளியில் ஆசிரியை படுகொலை; ஆசிரியர் சங்கத்தினர் கண்டனம்
பள்ளியில் ஆசிரியை படுகொலை; ஆசிரியர் சங்கத்தினர் கண்டனம்
பள்ளியில் ஆசிரியை படுகொலை; ஆசிரியர் சங்கத்தினர் கண்டனம்
ADDED : நவ 20, 2024 11:11 PM
திருப்பூர்; தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, திருப்பூர் மாவட்ட கிளை செயலாளர் ஜெயராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில், கற்பித்தல் பணி மேற்கொண்டிருந்த ஆசிரியை ரமணியை, பள்ளி வளாகத்துக்குள் புகுந்து கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவத்தை ஆசிரியர் கூட்டணி கண்டிக்கிறது.
இதுபோன்று பள்ளி வளாகத்துக்குள் புகுந்து ஆசிரியர்களை மிரட்டுவது, தாக்குவது, கொலை செய்வது போன்ற செயல்கள் ஆங்காங்கே நடைபெறுவது, ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இத்தகைய செயல்கள், பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கச் செய்துவிடும். எனவே, குற்ற செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.