/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தைகள் தின விழாவில் பாரம்பரியம் கற்பித்த ஆசிரியர்கள்
/
குழந்தைகள் தின விழாவில் பாரம்பரியம் கற்பித்த ஆசிரியர்கள்
குழந்தைகள் தின விழாவில் பாரம்பரியம் கற்பித்த ஆசிரியர்கள்
குழந்தைகள் தின விழாவில் பாரம்பரியம் கற்பித்த ஆசிரியர்கள்
ADDED : நவ 16, 2025 12:28 AM

திருப்பூர்: சமீபகாலமாக, உடல் நலன் சார்ந்த விஷயங்களில், கூடுதல் கவனம் செலுத்த துவங்கியிருக்கின்றனர், பொது மக்கள். உடல் உபாதைக்கு காரணமாகும், 'பாஸ்ட் புட்' வகைகளை தவிர்த்து, உடல் நலம் பேணும் சிறுதானிய உணவு உட்கொள்ள துவங்கியிருக்கின்றனர்.
குறிப்பாக, இதுகுறித்த விழிப்புணர்வை, பள்ளிக்குழந்தைகளின் மனதில் விதைப்பதில் ஆர்வம் காட்டியிருக்கின்றனர் ஆசிரியர்கள்.இரு நாளுக்கு முன், பள்ளிகளில் நடந்த குழந்தைகள் தின விழாவில் இதை பார்க்க முடிந்தது.
பெரிச்சிப்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் உமாமகேஸ்வரி வரவேற்றார். பி.டி.ஏ.,தலைவர் சிவசரண்யா, தலைமை வகித்தார்.
மாநகராட்சி கவுன்சிலர் ஆனந்தி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் இளவரசி, மகேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நாச்சியார் பாடசாலை தாளாளர் யுவராஜ் பிரபு, கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். திருப்பூர் தெற்கு வட்டார கல்வி அலுவலர் பூங்கொடி, அழகேசன் ஆகியோர் பேசினர்.
மாணவர்களுக்கு பாரம்பரிய உணவின் அவசியத்தை உணர்த்தும் வகையில், கடலை மிட்டாய் வழங்கப்பட்டது. மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளில் அசத்தினர்.
திருப்பூர், பாண்டியன் நகர் மாநகராட்சி பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவில், மேலாண்மை குழு உறுப்பினர்கள் இணைந்து, பள்ளி குழந்தைகளுக்கு பென்சில், ரப்பர் உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்கினர்.
பின், வகுப்பு வாரியாக மாணவ, மாணவியருக்கு பலுான் உடைக்கும் போட்டி, பானை உடைத்தல், ஓட்டப்பந்தயம், நீர் நிரப்புதல், குண்டெறிதல், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

