/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழில்நுட்ப பணிகள் தேர்வு; 807 பேர் எழுதினர்
/
தொழில்நுட்ப பணிகள் தேர்வு; 807 பேர் எழுதினர்
ADDED : ஆக 17, 2025 11:51 PM

திருப்பூர்; ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள், தமிழகம்முழுவதும் நேற்று நடைபெற்றன.
உதவி பொறியாளர் (சிவில்), ஜூனியர் திட்டமிடுனர், ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர், மாசுகட்டுப்பாடு வாரிய ஆய்வக நுாலகர் மொத்தம் 615 பணியிடங்களுக்காக தேர்வு நடத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி, கிட்ஸ் கிளப் பள்ளி ஆகிய இடங்களில் தலா ஒன்று; குமரன் மகளிர் கல்லுாரியில் 2 என, ஐந்து மையங்களில், 74 அறைகளில் தேர்வுகள் நடைபெற்றன. மொத்தம் 1,481 பேர் விண்ணப்பித்து, ஹால் டிக்கெட் பெற்றிருந்தனர்.
இவர்களில், 807 பேர் தேர்வு எழுதினர்; 674 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். காலை, 9:30 முதல் மதியம், 12:30 மணி வரை தேர்வு நடந்தது.
மையத்துக்கு ஒருவர் வீதம் ஐந்து பேர், மேற்பார்வையில் ஈடுபட்டனர்; இரண்டு மொபைல் குழுவினர், ரோந்து சென்று தேர்வு மையங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.