/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழில்நுட்ப பகிர்வு; ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு
/
தொழில்நுட்ப பகிர்வு; ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 02, 2025 11:26 PM

திருப்பூர்:திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், ஆதித்யா பிர்லா குழுமம் சார்பில், நீடித்த நிலையான எதிர்காலத்துக்கான, செயற்கை நுாலிழை ஆடைகள் என்ற கருத்தரங்கு நடந்தது.
பொதுச்செயலாளர் திருக்குமரன் தலைமை வகித்து பேசுகையில், ''உலக அளவிலான பேஷன் தொழிலில், பருத்தி நுாலிழை ஆடைகள் என்ற நிலையில் இருந்து, செயற்கை நுாலிழை ஆடைகள் என்ற நிலைக்கு மாறுவது தெளிவாக தெரிகிறது.
திருப்பூர் ஏற்றுமதியாளர், சீனா, வங்கதேசத்துடன் போட்டியிட முடியாத சூழல் ஏற்படுகிறது. தொழில்நுட்பத்தால், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை மேம்படுத்த வேண்டும். செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி தொழில்நுட்பத்தை பகிர, ஆதித்யா பிர்லா குழுமம் முன்வர வேண்டும்,'' என்றார்.
ஆதித்யா பிர்லா குழுமத்தினர் பேசுகையில், 'திருப்பூரில், குறைந்த செலவில், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தை உருவாக்குவோம்'' என்றனர்.செ யற்குழு உறுப்பினர்கள் அருண்ராமசாமி, இளங்கோ, பிரேம் அகர்வால் உள்ளிட்டோர் பேசினர்.
ஆதித்யா பிர்லா குழுமத்தில் இணைத் தலைவர் ஜோதி பிரகாஷ், பொதுமேலாளர்கள் ரமேஷ் வெங்கிடபதி, வைஷாலி காம்பிளே, நிதேஷ் அகர்வால் ஆகியோர் பங்கேற்றனர்.