ADDED : ஜூன் 09, 2025 09:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை செல்வ விநாயகர் கோவிலில், ஆண்டுவிழா சிறப்பு பூஜை நடந்தது.
உடுமலை ஜி.டி.வி., லே-அவுட் பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் இரண்டாமாண்டு ஆண்டுவிழா நடந்தது. கோ பூஜையுடன் விழா துவங்கியது.
தொடர்ந்து தீப பூஜை, விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், சங்கல்பம், கும்ப பூஜை, 108 சங்கு பூஜை, கணபதி ேஹாமம், வேத பாராயணம் நடந்தது.
சுவாமிக்கு சிறப்பு அபிேஷகத்துடன் ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், சுற்றுப்பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர்.