/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் மாற்றம்
/
கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் மாற்றம்
ADDED : ஏப் 25, 2025 07:48 AM
திருப்பூர்; கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் பழைய நுழைவு வாயில் அருகே பணிகள் நடப்பதால், பஸ் உள்ளே நுழைந்து, வெளியே செல்லும் வழி மாற்றப்பட்டுள்ளது.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், திருப்பூர் கோவில்வழி பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தி, கட்டும் பணி, 26 கோடி ரூபாயில், 2022ம் ஆண்டு துவங்கியது. வணிக வளாக கடைகள், பஸ் 'ரேக்' கட்டும் பணி நீண்ட இழுபறிக்கு பின், முடிவடைந்துள்ளது. பஸ்கள் நின்று புறப்பட்டு செல்ல ஏதுவாக, 28 'ரேக்'குகள் அமைக்கப்பட்டுள்ளன.
தரைத்தளம் மற்றும் பஸ்கள் வந்து செல்லும் சாலை அமைக்கும் பணி கடந்த வாரம் துவங்கியது. பஸ் உள்ளே செல்லும், வெளியே வரும் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை பஸ் ஸ்டாண்ட் வடக்கு நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்து, பஸ் ஸ்டாண்டுக்குள் வந்த பஸ்கள், இனி, தெற்கு நுழைவாயில் வழியாக உள்ளே வந்து, அதே வழியில் வெளியே செல்ல வேண்டும். வடக்கு நுழைவாயில் அருகே தார்சாலை மற்றும் கற்கள் பதிக்கும் பணி, 'ஆர்ச்' கட்டும் பணி முடியும் வரை இம்மாற்றம் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
---
வடக்கு நுழைவாயில் அருகே பணிகள் நடைபெற்று வருவதால், கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் உள்ளே நுழையவும், வெளியே வரவும், தெற்கு நுழைவாயிலை மட்டுமே பயன்படுத்த வேண்டியுள்ளது.

