/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதர் மண்டிய கோவில் நிலங்கள்; அறநிலையத்துறை 'குறட்டை'
/
புதர் மண்டிய கோவில் நிலங்கள்; அறநிலையத்துறை 'குறட்டை'
புதர் மண்டிய கோவில் நிலங்கள்; அறநிலையத்துறை 'குறட்டை'
புதர் மண்டிய கோவில் நிலங்கள்; அறநிலையத்துறை 'குறட்டை'
ADDED : ஜூன் 26, 2025 11:48 PM

பல்லடம்,; பல்லடம் வட்டாரத்தில், பொங்காளி அம்மன், மாகாளி அம்மன், அருளானந்த ஈஸ்வரர், முத்துக்குமாரசுவாமி, அல்லாளபுரம் உலகேஸ்வர சுவாமி கோவில் என, அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், எண்ணற்ற கோவில்கள் உள்ளன. இவற்றுக்குச் சொந்தமான சில நிலங்கள் ஆக்கிரமிப்பின் பிடியிலும், பிரச்னைகள் சார்ந்தும் இருப்பதால், கோர்ட் விசாரணையில் உள்ளன. வழக்கு விசாரணைக்கு உட்படாமல், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், பல நுாறு ஏக்கர் நிலங்கள், பயன்பாடற்று கிடைக்கின்றன. கடந்த காலங்களில், ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த நிலங்கள் மீட்கப்பட்டு, அவற்றில், அறநிலையத்துறை சார்பில், அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டன.
சில இடங்களில், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இவை புதர் மண்டிய காடுகளாக உள்ளன. இவற்றை குத்தகை அல்லது வாடகைக்கு விடுவதன் மூலமாகவோ, கட்டடங்கள், குடோன் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு விடுவதன் மூலமாகவோ அறநிலையத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். ஆனால், அதற்கான எந்த முனைப்பும் காட்டாமல் அறநிலையத்துறை உள்ளது.