
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்குளி அருகே சுண்டக்காம்பாளையம் கிராமம், புதுவலசு பகுதியில், உள்ள பெரிய நாச்சியம்மன் அண்ணமார் கோவிலில் பொங்கல் விழா நடந்தது. விழாவன்று காலையில், பொன்னர் சங்கர் கிளி வேட்டைக்கு புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது.
பின், ராஜாக்களுக்கு பொங்கல் படையல் வைக்கப்பட்டது. மாலை, செங்கமா முனி, மகா முனிக்கு கிடா வெட்டுதல், அண்ணமார் சுவாமி படுகளம் பூஜை மற்றும் பெரிய நாச்சியம்மனுக்கு கரகம் வைத்து பூஜையும் தொடர்ந்து இருளப்பனுக்கு பூஜையும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

