/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் திருப்பணி: பக்தர்கள் எதிர்பார்ப்பு
/
கோவில் திருப்பணி: பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 10, 2025 09:14 AM

திருப்பூர்: திருப்பூர் தெற்கு தாலுகா எல்லையில் உள்ள, வாலிபாளையத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவில் மிகவும் பழமையானது. ஹிந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்படுகிறது.
கோவில் சிதிலமடைந்ததால், திருப்பணி செய்து கோவிலை புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. கோவில் முழுவதும் இடித்து, திருப்பணி செய்ய, கோவில் நிலம் அளவீடு செய்யப்பட்டது. இந்நிலையில், கோவில் நிலம் தொடர்பான விவகாரத்தால், திருப்பணி துவக்குவது பாதிக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரீசித்தி விநாயகர் கோவில் தக்கார் வனராஜா கூறுகையில், ''கோவில் நிலம் முழுமையாக அளவீடு செய்து கண்டறியப்பட்டது. அருகே உள்ள நிலத்தை, முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் என்ற நபர் ஆக்கிரமித்துள்ளதால், கடையை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது. கோவில் நிலத்தை சட்ட ரீதியாக மீட்டு, திருப்பணிகளை விரைவில் துவக்குவோம்,'' என்றார்.
இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, ''கோவில் அருகே இருப்பது எனது நிலம்; அதற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் இருக்கின்றன. எனக்கு நோட்டீஸ் கொடுத்ததால், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன்,'' என்றார்.

