/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் வழி பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம் திடீர் ரத்து
/
கோவில் வழி பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம் திடீர் ரத்து
ADDED : மே 14, 2025 11:08 PM
திருப்பூர், ; கோவில் வழியில் புதிய பஸ் ஸ்டாண்ட், 26 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இங்கு, 35 கடைகள், 1 வாகன நிறுத்தம், ஒரு பொருட்கள் பாதுகாப்பு அறை அமைந்துள்ளது.
இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கட்டப்பட்ட கடைகளுக்கான ஏலம் நேற்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடந்தது. அப்போது, ஒரு கடையை ஏலம் எடுக்க தொகை குறிப்பிட்டு காசோலையை பெட்டியில் செலுத்திய நபர், அந்த கடை கிடைக்காததால், அதே காசோலையை பயன்படுத்தி வேறு கடைக்கு ஏலம் கோரினார்.
இதற்கு அதிகாரிகள் அனுமதித்ததன் காரணமாக, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, குறிப்பிட்ட சிலருக்கு ஆதரவாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்த காரணமாக, பாதியில் ஏலம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, அதிகாரிகள் பேச்சு நடத்திய பின், நேற்று நடந்த ஏலம் முழுவதும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், உரிய விதிகளின் அடிப்படையில் ஏலம் நடப்பதாகவும், மீண்டும் முறையான அறிவிப்புக்கு பின் ஏலம் நடக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.