/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் சுவர் விவகாரம்; முற்றுகை ஒத்திவைப்பு
/
கோவில் சுவர் விவகாரம்; முற்றுகை ஒத்திவைப்பு
ADDED : ஏப் 16, 2025 10:57 PM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி சார்பில், பி.என்., ரோடு கணக்கம்பாளையம் பிரிவு முதல் ஆண்டிபாளையம் வழியாக மாரியம்மன் கோவில் வரை மழைநீர் வடிகால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆண்டிபாளையம் சக்தி விநாயகர் கோவில் அருகே மழைநீர் வடிகால் பணிக்காக குழி தோண்டப்பட்டது.
கடந்த இரு வாரங்கள் முன் கனமழை பெய்தது. மழைக்கு சக்தி விநாயகர் கோவில் அருகில் தோண்டப்பட்ட குழியில் மழைநீர் தேங்கி மண் அரிப்பு ஏற்பட்டு கோவில் சுவர் சரிந்து விழுந்தது.
கோவில் சுற்றுச்சுவரை மழைநீர் வடிகால் கட்டும் ஒப்பந்ததாரர் மூலம் கட்டி தர வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தில் முறையிட்டனர். ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. பொதுமக்கள் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர். இதையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தினர் 'ஒரு வாரத்தில் கோவில் சுற்றுச்சுவரை கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி கூறினர். இதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.