/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கோவில் வழிபாடு நடைமுறை தகவல் பலகை நிறுவ வேண்டும்'
/
'கோவில் வழிபாடு நடைமுறை தகவல் பலகை நிறுவ வேண்டும்'
'கோவில் வழிபாடு நடைமுறை தகவல் பலகை நிறுவ வேண்டும்'
'கோவில் வழிபாடு நடைமுறை தகவல் பலகை நிறுவ வேண்டும்'
ADDED : ஜன 04, 2025 12:13 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ள எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில் மற்றும் அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ள பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், அபிேஷகபுரம் ஐராவதீஸ்வரர் கோவில், சேவூர் வாலீஸ்வரர் என, புராதன கோவில்கள் உள்ளன.
பக்தர்கள் கூறுகையில், ''ஒவ்வொரு கோவில்களிலும், அந்தந்த தலத்தின் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு, வழிபாட்டு முறை உள்ளது.
கோவிலுக்கு புதிதாக செல்லும் பக்தர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கும், அந்தந்த கோவிலில் எப்படி வழிபாடு நடத்துவது என்ற குழப்பம் உள்ளது.
முதலில் எந்த சுவாமியை வழிபட வேண்டும்; அடுத்தடுத்து எந்தெந்த சுவாமியை வழிபட வேண்டும்; நிறைவாக எந்த சுவாமியை வழிபட வேண்டும் என்பது குறித்து தெரிவதில்லை.  ஒவ்வொரு கோவில்களிலும், வழிபாட்டு நடைமுறையை விளக்கி, தகவல் பலகை வைக்க வேண்டும்'' என்றனர்.

