/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திடக்கழிவு மேலாண் ஒப்பந்த நிறுவனம் விதிமுறை மீறினால் டெண்டர் ரத்து
/
திடக்கழிவு மேலாண் ஒப்பந்த நிறுவனம் விதிமுறை மீறினால் டெண்டர் ரத்து
திடக்கழிவு மேலாண் ஒப்பந்த நிறுவனம் விதிமுறை மீறினால் டெண்டர் ரத்து
திடக்கழிவு மேலாண் ஒப்பந்த நிறுவனம் விதிமுறை மீறினால் டெண்டர் ரத்து
ADDED : அக் 25, 2025 01:22 AM
தி ருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை செய்யும் ஒப்பந்த நிறுவனத்துக்கு பல்வேறு விதிமுறைகளை விதித்து முறையாகப் பணியாற்றவும், மீறினால் டெண்டர் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள வார்டுகளில் தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து குப்பை கழிவுகளை அகற்றி வருகிறது. இதற்காக டன் ஒன்றுக்கு 3,851 ரூபாய் கட்டணம் வழங்கப்படுகிறது. தற்போது ஒப்பந்த விதிகளின்படி 10 சதவீதம் அதிகரித்து 4,621 ரூபாய் வழங்க வேண்டும். இதற்கான தீர்மானம் கடந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில், கொண்டு வந்த போது, கவுன்சிலர்கள் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டது.
குப்பை அகற்றும் விவகாரத்தில் நிலவும் பிரச்னைக்கு முக்கிய காரணமாக நிறுவனத்தின் செயல்பாடுகள் இருந்தது; கவுன்சிலர்கள், அதிகாரிகள் என யார் பேச்சையும் மதிப்பதில்லை என பலவாறு குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் நேற்று நடந்த சிறப்பு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இத்தீர்மானம் மீது கவுன்சிலர்கள் விவாதம் நடத்தினர். அனைத்து கட்சி கவுன்சிலர்களும் ஒப்பந்த நிறுவனத்துக்கு பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற வலியுறுத்தியும், ஒப்பந்தப்படி திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளவும் வேண்டும் என்று கடுமையாக தங்கள் கருத்தை முன் வைத்தனர்.
தீர்மானம் குறித்து மேயர் பேசியதாவது:
டன் அடிப்படையிலான கட்டண உயர்வு, 3 ஆண்டுக்குப் பதிலாக ஓராண்டுக்கு என மாற்றப்படும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, தேவையான அளவு பணியாளர்கள் நியமிக்க வேண்டும். வருகைப்பதிவு கட்டாயம் நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து பெற்று முறையாக வழ ங்க வேண்டும். அனைத்து வகை வாகனங்களும் உரிய எண்ணிக்கையில் பயன்படுத்த வேண்டும்.
நான்கு மண்டலங்களிலும், ஒர்க் ஷாப் ஏற்படுத்தி, வாகனங்கள் பழுது உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு உரிய தளவாடம், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். தினக்கூலி 613 ரூபாய்; இ.எஸ்.ஐ., - பி.எப்., பிடித்தம் மற்றும் சம்பள பில் வழங்க வேண்டும். இதற்கான சிறப்பு குழு, சுகாதார நிலைக்குழு தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டு, 15 நாளுக்கு ஒரு முறை இவை அனைத்தும் ஆய்வு செய்யப்படும். நிறுவனம் இவற்றை முறையாக பின்பற்றாவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

