தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஆடை உற்பத்தி திறனை அதிகரிக்கும் இயந்திரம் ‘டெக்ஸ்பிளஸ் டெக்னாலஜிஸ்’ எனும் மந்திரம்

ஆடை உற்பத்தி திறனை அதிகரிக்கும் இயந்திரம் ‘டெக்ஸ்பிளஸ் டெக்னாலஜிஸ்’ எனும் மந்திரம்

ஆடை உற்பத்தி திறனை அதிகரிக்கும் இயந்திரம் ‘டெக்ஸ்பிளஸ் டெக்னாலஜிஸ்’ எனும் மந்திரம்


UPDATED : அக் 15, 2026 06:26 PM

ADDED : அக் 15, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 06:26 PM ADDED : அக் 15, 2026 06:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூரில் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில், ஆடை உற்பத்தி திறனை அதிகரிப்பது முக்கியமானதாக உள்ளது. ஆடை உற்பத்தி பணிகளை திறமையாகவும், வேகமாகவும் தடையின்றி செய்யும் வகையில் திருப்பூரை சேர்ந்த எஸ்.டி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ஏற்றுமதியாளர்களின் ஆடை உற்பத்தியை கண்காணிக்க உதவும் வகையில் ‘டெக்ஸ்பிளஸ்’ நவீன கருவி உருவாக்கியுள்ளது.

எஸ்.டி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டெக்ஸ்பிளஸ் டெக்னாலஜிஸ் மூலம் இதற்கான தீர்வை காண முடியும். இதன் மூலமாக தொழிற்சாலைகளின் செயல்திறனை, 15 – 20 சதவீதம் வரை அதிகரிக்க முடியும். இந்த டெக்னாலஜியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே ஐந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு 2,000 கருவிகளை விற்பனை செய்துள்ளது.

ஆடை உற்பத்தி துறைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்பிளஸ் கருவி மூலமாக, நிகழ் நேரக்கண்காணிப்பு, கியூஆர் குறியீடு மூலமான தடமறிதல், உற்பத்தி பகுப்பாய்வு, பணியின் தன்னியக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலமாக முடிவெடுக்கும் ஆதரவு ஆகியவற்றின் மூலம் உற்பத்தி செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்தையும் இணைக்கும் ஒரு டிஜிட்டல் தளத்தை வழங்குகிறது.

இதுகுறித்து எஸ்.டி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் திருக்குமரன் கூறியதாவது:

ஜவுளித்துறைக்கு டிஜிட்டல் மயமாக்கலும், தானியக்கமும் காலத்தின் தேவையாக உள்ளது. நாம் ஏற்கனவே தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளோம். எனவே, இந்த சவாலை சமாளிக்க உதவும் தீர்வுகள் நமக்கு தேவை. இந்த கருவியின் விலை, 17 ஆயிரம் ரூபாய். இயந்திரங்களின் எண்ணிக்கையை பொறுத்து விலை சுமார், 3 லட்சம் – 10 லட்சம் வரை உள்ளது. எந்திரம் மற்றும் மென்பொருளை உருவாக்க டெக்ஸ்பிளஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக இரண்டு கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

வரவிருக்கும் வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா மிகப்பெரிய ஜவுளி ஆர்டர் வாய்ப்பை பெற்றுள்ளது. நாம் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இங்கிலாந்து, ஐரோப்பாவில் உள்ள வாங்குபவர்களிடம் இருந்து நாங்கள் ஏற்கனவே வலுவான ஆர்வத்தை காண்கிறோம். அவர்கள் மற்ற நாடுகளை விட இந்தியாவுடன் அதிக அளவில் ஆர்வம் செலுத்துகிறார்கள். ஒரு முக்கிய உற்பத்தி தளமாக உள்ளோம். இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள ஆடை உற்பத்தி திறனை மேம்படுத்த வேண்டும்.

வருங்காலங்களில் துணி உற்பத்தியில் இருந்து வினியோகம் வரை முழுமையான தொடக்கத்தில் இருந்து இறுதி வரை கண்காணிப்பை வழங்க எஸ்.டி. எக்ஸ்போர்ட்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்கள் செயல்திறன் தரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் என்ற பிம்பத்தை மாற்ற விரும்புவதாகவும், இந்தியா மிகச்சிறந்த உற்பத்தி மையங்களில் ஒன்றாக மாற வேண்டும்

இவ்வாறு அவர்கள் கூறினார்.

டெக்ஸ்பிளஸ் டெக்னாலஜியை பயன்படுத்தி வரும் நிறுவனத்தினர் கூறுகையில், ‘இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதன் வாயிலாக, செயற்கை நுண்ணறிவு மூலம் நேர ஆய்வு, ஊசி ஆய்வு, திறன் வரைபடம், சலவை ஆய்வு போன்ற ஆடை தயாரிப்பில் தொடர்புடையவற்றை கண்காணிக்க முடிகிறது. இதன் மூலம் 20 – 30 சதவீதம் வரை ஆடை உற்பத்தி நிறுவனத்தின் செயல்திறன் அதிகரித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை ஒரு விருப்ப தேர்வாக இல்லாமல், வணிக தேவையாக மாறி இருப்பதை அறிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்,’ என்றனர்.

உற்பத்தி திறனை உயர்த்தலாம்...
டெக்ஸ்பிளஸ் தொழில்நுட்ப இயக்குனர் அரவிந்தராஜ் கூறியதாவது:
தையல் இயந்திரங்களில் பொருத்தப்படும் ஏ.ஐ. எம்படட் கருவி தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து, பணித்திறனை உயர்த்த உதவும். தையல் இயந்திரங்களின் வேகம், வேலை செய்யும் நேரம் உள்ளிட்ட விவரங்களை இந்த சாதனம் துல்லியமாக பதிவு செய்வதால் தொழிலாளர்கள், எந்திரங்களின் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.
ஒரே நேரத்தில் 4 ஆயிரம் தையல் எந்திரங்களை இயக்கினாலும் ஒவ்வொரு தொழிலாளியின் பணித்திறனையும் கண்காணிக்க முடியும்.
இதன் மூலமாக அனுபவமிக்கவர்கள், புதியவர்கள் என அவர்களின் திறனை அறிந்து தேவையான பயிற்சியும், தகுதிக்கேற்ப வேலையும் வழங்க முடியும். தற்போது ஆடை உற்பத்தி துறையில் தொழிலாளர்களின் உழைப்புத்திறன் சுமார் 55 சதவீதமாக உள்ளது. இந்த ஏ.ஐ. சாதனத்தை பயன்படுத்துவதன் மூலம், அதனை 85 சதவீதமாக உயர்த்த முடியும். இதன் மூலமாக நிறுவனத்தின் வளர்ச்சியுடன் தொழிலாளர்களின் பொருளாதார நிலையும் மேம்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us