/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி பள்ளியில் மாயமான 'ஜவுளித் தொழில்நுட்பம்' பிரிவு
/
மாநகராட்சி பள்ளியில் மாயமான 'ஜவுளித் தொழில்நுட்பம்' பிரிவு
மாநகராட்சி பள்ளியில் மாயமான 'ஜவுளித் தொழில்நுட்பம்' பிரிவு
மாநகராட்சி பள்ளியில் மாயமான 'ஜவுளித் தொழில்நுட்பம்' பிரிவு
ADDED : ஏப் 15, 2025 05:58 AM
திருப்பூர்; திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில், மேல்நிலை வகுப்புகளில், ஜவுளித்தொழில்நுட்பம் பாடப்பிரிவை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்பட மாநிலம் முழுவதும் ஆறு பள்ளிகளில், மேல்நிலை வகுப்புகளில், ஜவுளித்தொழில்நுட்பம் பாடப்பிரிவு இருந்தது. நஞ்சப்பா பள்ளியில், இப்பாடப்பிரிவு பிளஸ் 1, பிளஸ் 2 ஆசிரியராக பணியாற்றிய, சிவராஜ், கடந்தாண்டு மாரடைப்பால் காலமானார்.
மாற்று ஆசிரியர் மூலம் மாணவர்களுக்கு மீதமிருந்த பாடம் கற்றுத்தரப்பட்டது; தேர்வெழுதிய, 58 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.காலியிடத்துக்கு வேறு ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. கடந்த கல்வியாண்டில் இருந்து இப்பள்ளியில் ஜவுளித்தொழில்நுட்பம் பிரிவு நீக்கப்பட்டுள்ளது.
பின்னலாடை, விசைத்தறி உள்பட ஜவுளித்துறையில் திருப்பூர் கோலோச்சிவருகிறது. இந்நிலையில், திருப்பூரில் நஞ்சப்பா பள்ளியில் இப்பாடப்பிரிவு இல்லாதது மாணவர்களையும், தொழில்துறையினரையும் வருத்தத்திற்குள்ளாக்கியுள்ளது. கல்வியாண்டு துவங்க உள்ள நிலையில், ஆசிரியரை நியமித்து இப்பாடப்பிரிவைச் செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.