ADDED : ஆக 11, 2025 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் அறிக்கை:
கடந்த 2023ம் ஆண்டில், திருப்பூர் தெற்கு தொகுதியில் மாவட்ட மைய நுாலகம் அமைக்க வேண்டும், பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் எனவும், தொகுதி மக்கள் சார்பில், முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஏற்றுக் கொண்ட முதல்வர், உடுமலையில் நடந்த அரசு விழாவில் இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
ஒன்பது கோடி ரூபாய் மதிப்பில், மாவட்ட மைய நுாலகம் அமைக்கவும், ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கவும் அறிவிப்பு வெளியிட்டார். மக்கள் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வருக்கு, தொகுதி மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன்.