/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
2026ம் ஆண்டு தேர்தல்; திண்ணை பிரசாரம் துவக்கிய அ.தி.மு.க.,
/
2026ம் ஆண்டு தேர்தல்; திண்ணை பிரசாரம் துவக்கிய அ.தி.மு.க.,
2026ம் ஆண்டு தேர்தல்; திண்ணை பிரசாரம் துவக்கிய அ.தி.மு.க.,
2026ம் ஆண்டு தேர்தல்; திண்ணை பிரசாரம் துவக்கிய அ.தி.மு.க.,
ADDED : பிப் 15, 2025 07:20 AM

திருப்பூர்; கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் திண்ணை பிரசாரம், திருப்பூரில் நேற்று துவங்கியது.
வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், அ.தி.மு.க., புதிய திட்டங்களுடன் களமிறங்கியுள்ளது. குறிப்பாக, ஜெ., பேரவை சார்பில், மாநிலம் முழுவதும், அ.தி.மு.க., வின் சாதனைகளை திண்ணை பிரசாரம் செய்யும் திட்டம் துவங்கியுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து, துண்டு பிரசுரம் அச்சிடப்பட்டுள்ளது. கட்சி தலைமை வழங்கியுள்ள துண்டு பிரசுரங்களை கொண்டு, மாவட்டம் தோறும், வார்டு வாரியாக திண்ணை பிரசாரம் நடக்க உள்ளது.
திருப்பூர் மாநகர் மாவட்டத்தில், தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று திண்ணை பிரசாரம் துவங்கியது. மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் லோகநாதன் தலைமையில், ஜெ., பேரவையில் மாநில இணை செயலாளர் குணசேகரன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.