/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாய்களின் 'அட்டூழியம்' தொடர்கிறது.... அரசின் செவிகளை எட்டாத விவசாயிகளின் கோரிக்கை; 6 மாதத்தில் 195 ஆடுகள் பலி

ADDED : நவ 20, 2024 11:16 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், தெரு நாய்கள் கடித்து பலியான ஆடுகளுக்கு, இழப்பீடு வழங்க பரிந்துரை செய்யுமாறு, கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. '6 மாதத்தில், 195 ஆடுகள், நாய்கள் கடித்து பலியாகியுள்ளன' என, கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், மூலனுார், குண்டடம், வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம், உடுமலை உள்ளிட்ட இடங்களில், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, தெரு நாய்கள் கடித்து, ஆடுகள் பலியாவது தொடர் கதையாக இருந்து வருகிறது. தினம் தினம் அரங்கேறி வரும் இச்சம்பவம், கால்நடை வளர்ப்போர் மத்தியில் கடும் அதிருப்தி, விரக்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்; இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். கடந்த, ஏப்., முதல் அக்., வரை, நாய்கள் கடித்ததால் பலியான ஆடுகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு, 'ஆடுகள் இறப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது' என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, 'அரசிடம் இருந்து இழப்பீடு தொகை பெற்றுத்தர ஆவண செய்ய வேண்டும்' என, திருப்பூர், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
ஓ...நாயும்
ஆட்டுக்குட்டியும்!
---------------
கடந்த, ஏப்., முதல்
அக்., மாதம் வரை
நாய்கள் கடித்து குதறியதில்
பலியான ஆடுகள்
(ஒவ்வொரு பகுதி வாரியாக)
மூலனுார் - 34
குண்டடம் - 9
வெள்ளகோவில் - 43
காங்கயம் - 75
தாராபுரம் - 13
உடுமலை - 21
மொத்தம், 195 ஆடுகள்