/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்கள் எதிர்ப்பால் ஆல மரம் தப்பியது
/
மக்கள் எதிர்ப்பால் ஆல மரம் தப்பியது
ADDED : மார் 08, 2024 01:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்;திருப்பூர், பி.என் ரோடு, பூலுவபட்டி நால் ரோட்டில் இருந்து, வாவிபாளையம் செல்லும் ரிங் ரோட்டை நெடுஞ்சாலை துறையினர் விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பஸ் ஸ்டாப் அருகில், 50 ஆண்டுகளுக்கு மேலான ஆல மரம் ஒன்று உள்ளது. மரத்தை வெட்ட நெடுஞ்சாலை துறையினர் நேற்று காலை முற்பட்டனர்.
இதனை அறிந்த மாவட்ட மனித உரிமை அமைப்பினர், மரத்தை வெட்ட கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்து வந்த வடக்கு தாசில்தார் மகேஸ்வரன், மாவட்ட நிர்வாகம் அனுமதியின்றி மரத்தை வெட்ட கூடாது என்றார். இதனால், மரம் வெட்டுவது தடுத்து நிறுத்தப்பட்டது.

