ADDED : மார் 18, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் 'வளர்ச்சி அடைந்த பாரதம்; மோடி அரசின் உத்தரவாதம்' என்ற தலைப்பில் மக்களிடம் தேர்தல் தொடர்பான கருத்துகளை பெறும் வகையிலான நிகழ்ச்சி.
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று நடந்தது. இதில், பொதுமக்கள் பலர், தங்கள் கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை எழுதி, அங்கிருந்த பெட்டியில் செலுத்தினர்.
மண்டல தலைவர் அங்குராஜ், ஆன்மிக பிரிவு மாவட்ட துணை தலைவர் சிவா, மண்டல பொது செயலாளர் ஸ்ரீ கணேஷ் உட்பட பலர்பங்கேற்றனர்.

