/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புத்தக கண்காட்சி மேடை நிகழ்ச்சி ஆர்.டி.ஓ., கண்காணிப்பில் நடக்கும்
/
புத்தக கண்காட்சி மேடை நிகழ்ச்சி ஆர்.டி.ஓ., கண்காணிப்பில் நடக்கும்
புத்தக கண்காட்சி மேடை நிகழ்ச்சி ஆர்.டி.ஓ., கண்காணிப்பில் நடக்கும்
புத்தக கண்காட்சி மேடை நிகழ்ச்சி ஆர்.டி.ஓ., கண்காணிப்பில் நடக்கும்
ADDED : ஜன 26, 2025 03:23 AM
திருப்பூர்: ''திருப்பூர் புத்தக கண்காட்சி மேடை நிகழ்ச்சிகள் அனைத்தும், ஆர்.டி.ஓ., கண்காணிப்பில் நடத்தப்படும்,'' என, கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.
திருப்பூர் புத்தக கண்காட்சியின் மேடை நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., குறித்து பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம், திருப்பூர் புத்தக திருவிழாவில், இருதரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கண்காட்சி நடக்கும் காங்கயம் ரோடு பகுதியில், இரு தரப்பினர் நடத்திய மறியல் போராட்டத்தால், பதட்டம் நிலவியது. போலீசார், சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., குறித்துதவறாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தட்டிக்கேட்டவரை தாக்கியவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பா.ஜ., மற்றும் ஹிந்து முன்ணனி நிர்வாகிகள் நேற்று போலீசில் புகார் அளித்துள்ளனர். முன்னதாக, புத்தக கண்காட்சி ஏற்பாடு குறைபாடுகள் குறித்து, கலெக்டரை சந்தித்து பேசினர்.
அரசு சார்பில் நடக்கும் கண்காட்சியில், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான பேச்சை கட்டுப்படுத்த வேண்டும்; வீண் மோதல் ஏற்படுத்தும் போக்கை கட்டுப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினர். இருதரப்பினரையும் அழைத்து பேசிய கலெக்டர், புத்தக கண்காட்சி மேடை நிகழ்ச்சிகள் அனைத்தும், திருப்பூர் ஆர்.டி.ஓ., கண்காணிப்பில் நடக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:
திருப்பூர் புத்தக கண்காட்சியில் நடக்கும் மேடை நிகழ்ச்சிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., மற்றும் நுாலக அதிகாரிகள், கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். மேடை நிகழ்ச்சிகள் அனைத்தும், ஆர்.டி.ஓ.,வின் முழு கட்டுப்பாட்டில் இயங்கும்.
சிறப்பு சொற்பொழிவார்கள், வழங்கப்பட்டுள்ள தலைப்பில் மட்டும் பேச வேண்டும். புத்தக வாசிப்பு, புத்தக கண்காட்சி, தமிழ்மொழியின் சிறப்பு, இலக்கியம் என, கண்காட்சிக்கு தொடர்புடைய கருத்துக்கள் மட்டும் பேச அறிவுறுத்தப்படுவர். தேவையற்ற கருத்துக்களை பேச வேண்டாமென, முன்கூட்டியே, தினமும் அறிவுறுத்தப்படும்.
ஒவ்வொரு மேடை நிகழ்ச்சியின் போதும், திருப்பூர் ஆர்.டி.ஓ., மற்றும் மாவட்ட நுாலக அலுவலர் ஆகிய இருவரும், மேடையிலேயே இருந்து நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இருதரப்பினரிடமும் முழுமையாக ஏற்றுக்கொண்டனர்; புத்தக கண்காட்சி மேடை நிகழ்ச்சியில் இனி எவ்வித பிரச்னையும் இருக்காது.
இவ்வாறு, கலெக்டர் கூறினார்.
அரசு சார்பில் நடக்கும் கண்காட்சியில், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான பேச்சை கட்டுப்படுத்த வேண்டும்; வீண் மோதல் ஏற்படுத்தும் போக்கை கட்டுப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினர்

