sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பட்டாசு வாங்க போலாமுங்களா! வாரியிறைக்கும் வண்ணங்களை... வாண வேடிக்கை தொடும் உள்ளங்களை! வித விதமா பட்டாசு... வரிசை கட்டும் வண்ணப்பட்டாசு... உற்சாகத்தில் நிறையுமே மனசு!

/

பட்டாசு வாங்க போலாமுங்களா! வாரியிறைக்கும் வண்ணங்களை... வாண வேடிக்கை தொடும் உள்ளங்களை! வித விதமா பட்டாசு... வரிசை கட்டும் வண்ணப்பட்டாசு... உற்சாகத்தில் நிறையுமே மனசு!

பட்டாசு வாங்க போலாமுங்களா! வாரியிறைக்கும் வண்ணங்களை... வாண வேடிக்கை தொடும் உள்ளங்களை! வித விதமா பட்டாசு... வரிசை கட்டும் வண்ணப்பட்டாசு... உற்சாகத்தில் நிறையுமே மனசு!

பட்டாசு வாங்க போலாமுங்களா! வாரியிறைக்கும் வண்ணங்களை... வாண வேடிக்கை தொடும் உள்ளங்களை! வித விதமா பட்டாசு... வரிசை கட்டும் வண்ணப்பட்டாசு... உற்சாகத்தில் நிறையுமே மனசு!


UPDATED : அக் 12, 2025 01:25 AM

ADDED : அக் 11, 2025 11:21 PM

Google News

UPDATED : அக் 12, 2025 01:25 AM ADDED : அக் 11, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாட்டின் முக்கிய பண்டிகை என்றாலே, கண்ணை மூடிக் கொண்டு குழந்தையும் சொல்லும் தீபாவளி. அந்தளவுக்கு அது, சிறியவர் முதல் பெரியவர் மனங்களில் மத்தாப்பூ போல மலர்கிறது. புத்தாடை, பல்வகை இனிப்புகள், பட்டாசு இம்மூன்றும் தீபாவளிக்கான இலக்கணம் என்றே சொல்லலாம். ஆண்டுதோறும் தீபாவளிக்கென்று பிரத்யேக, புதுமையான வெடிகளை, பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்து அசத்துகின்றன. இந்தாண்டு திருப்பூருக்கு தருவிக்கப்பட்டுள்ள பட்டாசுகள் குறித்த ஒரு கண்ணோட்டம், இதோ:

* கலர் கோட்டி

ஒரு பெட்டிக்குள் ஆறு வகை புஸ்வாணங்கள் உள்ளன. திரியில் நெருப்பு வைத்தவுடன், அவை ஒவ்வொன்றும் வரிசையாக ஒவ்வொரு வண்ணத்தில், பொறிகளாக ஒளிரும். வண்ணங்களை வாரியிறைக்கும் கலர் கோட்டி அனைவருக்கும் பிடிக்கும்.

* சிக்ஸ்த் சென்ஸ்

பட்டாசுகளுக்கு அறிவு உள்ளதா என்ற யோசிக்கையில், ஐந்து, ஆறு மற்றும் ஏழாம் அறிவு என்ற பெயரில், வாணவேடிக்கை விற்பனைக்கு வந்துள்ளது. நீண்ட குழல் அமைப்பில் உள்ள இது, வெடித்தவுடன் வானில் உயரத்துக்கு சென்று வண்ணங்களில் பொறிகளை உமிழும். குறிப்பாக சொல்வதென்றால், வானில் ஒரு வர்ணஜாலம்.

* சோனி மிக்ஸ்

இது தரையில் வெடிக்கும் மத்தாப்பு ரகம். நெருப்பு பற்றவைத்தவுடன், பொறிப்பொறியாக வந்து, அடுத்து சிறிய சத்தத்துடன் வெடித்து மீண்டும் வண்ண பொறிகளுடன் காட்சியளிக்கும். மொத்தத்ததில், வாணம், மத்தாப்பு, பட்டாசு என மூன்றையும் கலவையாக கொண்டுள்ளது.

* ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

இது ஒரு வாணவேடிக்கை விளையாட்டு தான். ஆனால், வண்ணத்தில் முக்கியெடுத்த நட்சத்திரங்களை உயரச்சென்று வெடியுடன் உமிழும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சம் என்னவெனில், மிகுந்த உயரத்தில் சென்று வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

* பிளாக் டெரர்

'பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல...' என்ற ரஜினியின் வசனத்தைபோல, பிளாக் டெரர் வண்ணக்கலவைகளில் அதிர வைக்கும். நட்சத்திரங்கள் மின்னமின்ன , உயரே சென்று வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், இது கண்ணுக்கு விருந்து.

* ஹேப்பி பூம்

ஒட்டு மொத்த மகிழ்ச்சியை ஒரு சேர கொண்டு வரும், மத்தாப்பூ வகையிலான இந்த பட்டாசு, ஒரு முறைக்கு ஐந்து சிறிய ராக்கெட்டாக, பல வண்ணங்களில், பொறிகளில் குறவைான உயரத்தில் வெடிக்கும். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

* செல்பி ஸ்டிக்

இது சிறுவர்களுக்கான ஒரு வண்ணமயான மத்தாப்பூ. பாதுகாப்பாக கைகளில் பிடித்து கொண்டால், அதிலிருந்து வண்ண வண்ணப்பொறிகள் வந்து கொண்டேயிருக்கும். வெளியேறும் வண்ணங்கள் சிறுவர்களின் மனம் குதுாகலிக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.

* ஒலிம்பிக் டார்ச்

பெயருக்கேற்றுவாறு ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சும் ஒரு பட்டாசு இது. நெருப்பை பற்ற வைத்தவுடன், அழகாக பொறிகளை உமிழும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வெடிச்சத்தமின்றி ஒளிரும் பட்டாசு என்பதால், அனைவருக்கும் பிடிக்கும்.

* கலர் ஸ்மோக்

வெடிக்காது, பொறிகள் வராது. ஆனால், பல வண்ணங்களில் புகைகளை வெளியேறும் ஒரு புதுமையான பட்டாசு. குறிப்பாக சொல்ல வேண்டுமானால், பாம்பு பட்டாசில் கரும்புகை வரும். இதில், கலர் கலராக புகை வரும். சிறுவர், சிறுமியர் மிகவும் விரும்பும் பட்டாசு.

* விவோ பிளாஷ் ஸ்டார்

பெயரை பார்த்தவுடன் மொபைல் போன் என்று எண்ணத்தோன்றும். பெயரில் மட்டுமல்ல... வடிவத்திலும் போன் போன்ற அமைப்பிலுள்ள இந்த பட்டாசு நல்ல சத்தத்துடன் அதிலும், வண்ணமயமான பொறிகளுடன் வெடிக்கும். காலத்துக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ள பட்டாசு.

* கலர் பர்ட்ஸ்

பெயரை பார்த்த மாத்திரத்திலே தெரிந்து கொள்ளலாம், வண்ணங்களை வாரியிறைக்கும் பட்டாசு என்று. நெருப்பு பட்டவுடன், சிறிய சத்தத்துடன் ஆனால், அழகான வண்ணங்களில் ஒளிரும். அதிலும், இரவு நேரத்தில் சொல்லவே வேண்டாம். வண்ணக்கலவை வெளியேறும் அழகு அருமை.

* ரெட் போர்ட்

வழக்கமான ரெட்போர்ட் பட்டாசு என்றாலும், இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், வெடிக்கும்... சத்தம் வரும். ஆனால், புகை வராது. மிகவும் நெருக்கமான சரவெடி என்பதால், தெருவே அதிரும் வகையில் சத்தம் வரும். கூடவே, சந்தோஷமும் வரும்.

* கூகுள் கலாட்டா

பெயரிலேயே விஷயம் உள்ளது. பெட்டி போன்ற அமைப்பில், மொத்தம் ஐந்து சிறிய வகை புஸ்வாணம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்துக்கும் திரி இணைப்பு உள்ளது. ஒரு பட்டாசு எரிந்து சுற்றியவுடன், அடுத்தது சுற்ற ஆரம்பிக்கும். இவ்வாறு சங்கு சக்கரம் போல, சுற்றும் பட்டாசசை குட்டீஸ்கள் விரும்புவர்.

* திருப்பதி லட்டு

பெரிய உருண்டையாக, லட்டு போல பெரிய சைஸில் இருக்கும் பட்டாசை பார்த்து இனிக்குமோ என்று கேட்காதீர்கள். திரியில் தீப்பிடித்தவுடன், மஞ்சள் கலரில் நட்சத்திர பொறிகளை அள்ளித்தெளிக்கும் என்பது உறுதி. திருப்பதி லட்டு போல, இந்த பட்டாசு அனைருக்குமே மகிழ்ச்சியை தரும்.

* அனுமன் கதாயுதம்

இந்த ஆண்டு தீபாவளி பட்டாசு ரகங்களில் சிறுவர்களை சுண்டி இழுப்பது இந்த அனுமன் கதாயுதம் தான். பெரிய அளவில் உள்ள இந்த கதாயுதத்தின் நுனியில் பற்றி வைத்தால், வண்ணப்பொறிகளின் ராஜ்ஜியம் தான். பெரிய சைஸில் இருப்பதால், சிறுவர்கள் ஏன் குழந்தைகள் கூட பாதுகாப்பாக வெடிக்கலாம்.

* எம்பரர் ஸ்வார்டு

நீண்ட போர் வாள் போலுள்ள இந்த பட்டாசு, முற்றிலும் கம்பி மத்தாப்பு வகையை சார்ந்தது. பயமின்றி கைகளில், வாளின் கைப்பிடியை பிடித்து கொண்டு வெடிக்கலாம். சத்தம் வராமல் ஒளிரும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களின் முக்கிய விருப்பமான பட்டாசுகளில் இது கண்டிப்பாக இடம் பெறும்.

என்ன குட்டீஸ்... தீபாவளி பட்டாசு வாங்க கெளம்பீட்டீங்களா!

காற்றில் சுழலும் சங்கு சக்கரம் * ஸ்டார் ஸ்பார்க்கிள்ஸ் ஒரு வகையான சங்கு சக்கரம் என்றாலும், தரையில் சுற்றாது. காற்றில் சுழலும். இதன் நடுவே உள்ள கம்பியை பிடித்து கொண்டால், நன்றாக சுழலும். அப்போதும், வண்ணப்பொறிகள் வளையமாக வெளியேறும். கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.



பண மழை பொழியும் * மனி பேங்க் பேங்க் போனால் பணம் எடுக்கலாம். ஆனால், இந்த மனி பேங்க் பட்டாசு வெடித்தவுடன் பண (போலி தாள்கள்) மழை பொழியும். ஆனால், ஒரிஜினல் பணம் அல்ல. சிறுவர்களுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ள இந்த வகை பட்டாசு நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us