தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பி.ஏ.பி., கால்வாயில் நீரை திருடினால் வழக்கு!: நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

பி.ஏ.பி., கால்வாயில் நீரை திருடினால் வழக்கு!: நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

பி.ஏ.பி., கால்வாயில் நீரை திருடினால் வழக்கு!: நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

1


UPDATED : செப் 20, 2026 05:57 PM

ADDED : செப் 20, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 20, 2026 05:57 PM ADDED : செப் 20, 2026 05:02 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் போது, நீர் திருட்டு மற்றும் இரு புறமும் உள்ள கிணறுகளுக்கு நீர் எடுப்பது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டால், மின் இணைப்பு துண்டிப்பு, கிரிமினல் வழக்கு பதிவு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 94,201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன. விரைவில் இந்த மண்டல பாசனத்துக்கு, பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

திருமூர்த்தி அணையிலிருந்து மண்டல பாசனத்துக்கு, பிரதான மற்றும் கிளை கால்வாய்களில் தண்ணீர் திறக்கும் போது, நீர் திருட்டு பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. இந்தாண்டு நீர் திருட்டை தடுக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், நீர் வளத்துறையினரும் ஆலோசித்து நடவடிக்கைகளை துவக்கியுள்ளனர்.

பி.ஏ.பி., திருமூர்த்தி கோட்ட செயற்பொறியாளர் பிரபாகரன் கூறியதாவது: பி.ஏ.பி., ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, தண்ணீர் செல்லும் காலங்களில், பிரதான, கிளை, பகிர்மான கால்வாய்களில், நீர் திருட்டில் ஈடுபடக்கூடாது.

கால்வாய்களின் இரு புறமும், 300 மீட்டருக்குள் அமைந்துள்ள கிணறுகளிலிருந்து, பாசன காலங்களில் நீர் எடுக்க தடைவிதிக்கப்படும்.

அதோடு, பக்கவாட்டு துளைகள் அமைத்திருத்தல், கால்வாயின் குறுக்கே குழாய் அமைத்து முறைகேடாக தண்ணீர் கொண்டு செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால், போலீசில் கிரிமினல் வழக்குப்பதிவு செய்து, மின் இணைப்பு துண்டிப்பு, அரசு சலுகைகளை ரத்து செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நீர்வளத்துறையால் விவசாய பயன்பாட்டிற்கு புதிய மின் இணைப்பு வழங்க, மின் வாரியத்திற்கு வழங்கப்படும் தடையின்மை சான்றுகளிலும், பாசன கால்வாய்களில் தண்ணீர் செல்லும் காலங்களில், மின் மோட்டார்களை இயக்கக்கூடாது எனத் தெளிவாக குறிப்பிட்டு, சான்று வழங்கப்பட்டுள்ளது.

எனவே, பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு, விரைவில் தண்ணீர் திறக்க உள்ள நிலையில், கால்வாய்களில் விதிமுறைகளை மீறி, மின்மோட்டார்களை இயக்கினால், மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க மின் வாரியத்திற்கு பரிந்துரைக்கப்படும்.

மின் மோட்டார்கள், குழாய்கள் பறிமுதல் மற்றும் குற்றவழக்கு பதிவு செய்து கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us