/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிறிஸ்தவர் தவக்காலம் துவங்கியது
/
கிறிஸ்தவர் தவக்காலம் துவங்கியது
ADDED : பிப் 14, 2024 11:53 PM

திருப்பூர்: கிறிஸ்தவர்களின் தவக்காலம், சாம்பல் புதன் நிகழ்வுடன், நேற்று துவங்கியது.கிறிஸ்தவர்கள் வணங்கும் ஏசு கிறிஸ்து, சிலுவையில் அறையுண்டு மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார் என்ற நம்பிக்கை அடிப்படையில், ஆண்டுதோறும், ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா, அடுத்த மாதம், 31ம் தேதி கொண்டாடப்படுகிறது.திருப்பூர், குமார் நகர் புனித ஜோசப் சர்ச், புனித கேத்ரீன் சர்ச், அவிநாசி புனித தாமஸ் சர்ச், லுார்துபுரம் புனித லுார்து அன்னை சர்ச் என, மாவட்டம் முழுக்க உள்ள தேவாலயங்களில், நேற்று, சாம்பல் புதன் நிகழ்வுடன், இப்பெருநாள் துவங்கியது. இடைபட்ட, 46 நாட்கள், தவக்காலமாக அனுசரிக்கப்படுகிறது.சாம்பல் புதன் தினமாக நேற்று தேவாலயங்களில் திருப்பலி நடத்தப்பட்டு, பக்தர்களின் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது. வரும் நாட்களில் ஆன்மிக மறையுறை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஏசுவின் சிலுவை பாடுகளை தியானிக்கும் வகையில், வாரந்தோறும், வெள்ளிக்கிழமைகளில், தேவாலயங்களில் சிலுவைப்பாதை ஆராதனை நடத்தப்படும். அடுத்த மாதம், 29ம் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது; 31ம் தேதி ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
---
கிறிஸ்தவர்கள் தவக்காலத்தின் தொடக்கம், சாம்பல் புதன் நிகழ்வுடன் நேற்று துவங்கியது. திருப்பூர், குமார் நகர், புனித சூசையப்பர் சர்ச்சில், நேற்று, பக்தர்களின் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது.

