/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடைத்தொழில் புதிய உச்சத்தை அடையும்: மத்திய நிதியமைச்சருக்கு ஏ.இ.பி.சி., பாராட்டு
/
ஆடைத்தொழில் புதிய உச்சத்தை அடையும்: மத்திய நிதியமைச்சருக்கு ஏ.இ.பி.சி., பாராட்டு
ஆடைத்தொழில் புதிய உச்சத்தை அடையும்: மத்திய நிதியமைச்சருக்கு ஏ.இ.பி.சி., பாராட்டு
ஆடைத்தொழில் புதிய உச்சத்தை அடையும்: மத்திய நிதியமைச்சருக்கு ஏ.இ.பி.சி., பாராட்டு
ADDED : செப் 09, 2025 11:12 PM

திருப்பூர்; 'ஜி.எஸ்.டி., வரிசீரமைப்பு நடவடிக்கை, உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்தி, ஆடைத்தொழில் புதிய உச்சத்தை அடைய உதவியாக இருக்கும்,' என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் சக்திவேல் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்த, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல் அனுப்பியுள்ள கடிதம்:
சமீபத்திய ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு, ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் திருப்பூர் பின்னலாடைத்துறை சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
துணிச்சலான மற்றும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட இந்நடவடிக்கை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிப் பாதையை வலுப்படும். சீர்திருத்த நடவடிக்கைக்கு, எங்கள் தொழில்துறை தோளோடு தோள் நின்று ஒத்துழைப்பை வழங்கும்.
ஜி.எஸ்.டி., இரண்டு வரி அடுக்காக மாற்றியதால், கட்டமைப்பு எளிதாகும்; பல்வேறு வகையில் சுமைகள் குறையும்; வணிக நடவடிக்கையை எளிதாக்கும். வரி சீர்திருத்தம் வாயிலாக, சாமானிய மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மேம்படும்; இந்தியா, விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்க வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது.
புதிய நிர்வாக நடவடிக்கைகள், வினியோகச் சங்கிலி அமைப்பை நெறிப்படுத்தும். வரிசீரமைப்பு, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியையும், வர்த்தகத்தையும் ஊக்குவிக்கும். ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளை வழங்கும். சுதந்திர தினவிழா உரையில், பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருந்தபடி, வரி சீர்திருத்தம், ஒவ்வொரு இந்திய குடிமகனின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. செங்கோட்டையிலிருந்து வெளிப்பட்ட பிரதமரின் எண்ணத்தை, செயல்வடிவமா க மாற்றிய, நிதி அமைச்சர் தலைமையிலான குழுவினருக்கு நன்றி.
இந்த முற்போக்கான நடவடிக்கை, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும்; உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்தும். ஜவுளி மற்றும் ஆடைத் தொழில் புதிய உச்சத்தை அடைய உதவியாக இருக்கும். அதுமட்டுமல்ல, 'மேக் இன் இந்தியா' என்ற தேசிய தொலைநோக்கு பார்வையை மேம்பட்டதாக மாற்றியமைக்கும்.
இவ்வாறு, சக்திவேல் தெரிவித்துள்ளார்.