/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறிவியல் நிலைய செயல்பாடு அறிய கலெக்டர் காட்டிய ஆர்வம்
/
அறிவியல் நிலைய செயல்பாடு அறிய கலெக்டர் காட்டிய ஆர்வம்
அறிவியல் நிலைய செயல்பாடு அறிய கலெக்டர் காட்டிய ஆர்வம்
அறிவியல் நிலைய செயல்பாடு அறிய கலெக்டர் காட்டிய ஆர்வம்
ADDED : ஜூலை 04, 2025 09:47 PM
- நமது நிருபர் -
பொங்கலுாரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தை, மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே, பார்வையிட்டார்.
திருப்பூர் மாவட்டத்துக்கு புதியதாக பொறுப்பேற்ற கலெக்டர் மனிஷ் நாரணவரே, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள பொங்கலுார் வேளாண்மை அறிவியல் நிலையத்தை பார்வையிட்டார்.
நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், நிலையத்தின் செயல்பாடுகளை விளக்கினார். பசுந்தாள் உரமாக தயாரிக்கப்பட்டு வரும் சனப்பு தக்கைப்பூண்டு சாகுபடி முறை, அவற்றால் ஏற்படும் மண்வள மேம்பாடு, தேனீ வளர்ப்பு, பயிர் மகசூல் அதிகரிப்பு மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் உள்ளிட்ட அறிவியல் நிலையத்தின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து, அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் துக்கையண்ணன், விஞ்ஞானிகள் கலையரசன், சுமித்ரா ஆகியோர் விளக்கமளித்தனர்.
தேனீக்கள் வளர்ப்பில் பயிற்சி பெற்ற டாக்டர் ராஜகுரு, தேனீ பிரித்தெடுக்கும் இயந்திர பயன்பாடு மற்றும் கோழிக்குஞ்சு அடைகாக்கும் இயந்திரம் குறித்து விளக்கமளித்தார். பின், கலெக்டர், அறிவியல் நிலைய விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
முடிவில், நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். உடன், மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் சுந்தர வடிவேல், தோட்டக்கலை துணை இயக்குனர் சசிகலா, வேளாண்மை பொறியியல் செயற் பொறியாளர் கார்த்திகேயன், பொங்கலுார் ஒன்றிய வேளாண்மை உதவி இயக்குனர் பொம்மராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.