/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கமிஷனர் அலுவலகம் வரும் 7ம் தேதி திறப்பு
/
கமிஷனர் அலுவலகம் வரும் 7ம் தேதி திறப்பு
ADDED : அக் 01, 2024 12:09 AM

திருப்பூர் : திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வரும், 7ம் தேதி திறக்கப்பட உள்ளது.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரகம் கடந்த, 2014ம் ஆண்டு முதல் பூலுவபட்டியில் உள்ள வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
புதிய அலுவலகம் அமைக்க பல இடங்களில் இடம் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த, 2 ஆண்டுக்கு முன் அவிநாசி ரோட்டில், குமார் நகர், 60 அடி ரோட்டில் உள்ள பழைய ஆர்.டி.ஓ., அலுவலகம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கி முழு வீச்சில் நடந்தது.
இதனை தொடர்ந்து, தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கழகம் சார்பில், 2.24 ஏக்கர் பரப்பில், ஐந்து மாடிகளுடன் கட்டப்பட்டது.
கமிஷனர், துணை கமிஷனர்கள் அறை, உதவி கமிஷனர் கட்டுப்பாட்டு அறை, மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இடம்பெற்றுள்ளது. பணிகள் முடிந்து, ஆறு மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருந்தது வந்தது.
இச்சூழலில், வரும் 7ம் தேதி புதிய கமிஷனர் அலுவலகம் திறக்கப்படுவதற்கான உத்தரவை டி.ஜி.பி., அலுவலகம் வெளியிட்டது. ஒரு வாரம் கால உள்ளதால், திறப்பு விழாவுக்கான பணிகளில், கமிஷனர் லட்சுமி தலைமையில், அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.