/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'காமராஜரை மறந்த காங்., கட்சியினர்'
/
'காமராஜரை மறந்த காங்., கட்சியினர்'
ADDED : ஜூலை 27, 2025 11:47 PM

பல்லடம்; ''காமராஜரை மறந்து பேசும் காங்., கட்சியினர்தான் இன்று உள்ளனர்'' என்று மதச் சார்பற்றஜனதா தளத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி பேசினார்.
காமராஜரை இழிவுபடுத்தி பேசிய தி.மு.க., எம்.பி, திருச்சி சிவாவை கண்டித்து, காமராஜ் நற்பணி மன்றம் சார்பில் பொதுக்கூட்டம், பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில் நடந்தது.
மத சார்பற்ற ஜனதா தளத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். த.மா.கா., மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர் ராமசாமி, மாவட்ட துணை தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத சார்பற்ற ஜனதா தளத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி பேசியதாவது:
எட்டு அமைச்சர்களுடன் தமிழகத்தை ஆண்டவர் காமராஜர். ஆறு கண்ட இடமெல்லாம் அணையை கட்டியவர். தி.மு.க.,வினருக்கு காமராஜரை பற்றி என்ன தெரியும்? மக்கள் மன்னித்தாலும் அந்த ஆண்டவனே சிவாவை மன்னிக்க மாட்டார்.
சிவா பேசியதால், காமராஜருக்கு களங்கம் அல்ல. அவரைப் பற்றி பேசியதால், தற்போது சிவாவுக்குத்தான் களங்கம் ஏற்பட்டு வருகிறது. ஏழைகளின் வலியை உணர்ந்து செயல்பட்டவர் காமராஜர்.
நடப்பதுதான் காமராஜர் ஆட்சி, கக்கன் ஆட்சி என, காமராஜரை மறந்து பேசும் காங்., கட்சியினர்தான் இன்று உள்ளனர். ஓரளவாவது தமிழக மக்கள் மன்னிக்க வேண்டும் என்றால், சிவாவை பதவியிலிருந்து நீக்கி, அவரை மன்னிப்பு கேட்க செய்ய வேண்டும்.
இவ்வாறு, பொன்னுசாமி பேசினார்.