/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகராட்சியுடன் கணக்கம்பாளையத்தை இணைக்கணும்! மாவட்ட கலெக்டரிடம் ஒருங்கிணைப்பு குழு மனு
/
நகராட்சியுடன் கணக்கம்பாளையத்தை இணைக்கணும்! மாவட்ட கலெக்டரிடம் ஒருங்கிணைப்பு குழு மனு
நகராட்சியுடன் கணக்கம்பாளையத்தை இணைக்கணும்! மாவட்ட கலெக்டரிடம் ஒருங்கிணைப்பு குழு மனு
நகராட்சியுடன் கணக்கம்பாளையத்தை இணைக்கணும்! மாவட்ட கலெக்டரிடம் ஒருங்கிணைப்பு குழு மனு
ADDED : ஜன 30, 2025 11:10 PM
உடுமலை: உடுமலை நகராட்சியுடன் கணக்கம்பாளையம் ஊராட்சியை இணைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் திருப்பூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கணக்கம்பாளையம் ஊராட்சியை, உடுமலை நகராட்சியுடன் இணைக்க வலியுறுத்தி, குடியிருப்போர் சங்கங்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் கொண்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வழங்கிய மனுவில் கூறியுள்ளதாவது:
உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி, உடுமலை, நகராட்சியின், கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளுடன் இணைந்த பகுதியாக உள்ளது. இந்த ஊராட்சி, 5.74 சதுர கி.மீ., பரப்பளவுடன், 30 ஆயிரம் மக்கள் தொகை கொண்டதாக உள்ளது.
வெஞ்சமடை, கணேசபுரம், சாதிக் நகர், சென்னிமலைபாளையம், எஸ்.வி., புதுார், எஸ்.வி., புரம், காந்திபுரம், ஜீவா நகர், ஸ்ரீ ராம் நகர் என குடியிருப்புகள் நெருக்கமாக உள்ள வளர்ச்சியடைந்த புற நகர பகுதியாக உள்ளது.
கணக்கம்பாளையம் வருவாய் கிராமத்தில், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லுாரிகள் என அனைத்தும் நகராட்சி பகுதியோடு அமைந்துள்ளன.
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அரசு ஐ.டி.ஐ., வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு மாணவ, மாணவியர் விடுதிகள் மற்றும் மின் மயானம் கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியோடு உள்ளது.
உடுமலை உள்ளூர் திட்ட குழுமத்தில், கணக்கம்பாளையம் வருவாய் கிராமம், 2013ல் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது, நகர்புறத்திற்கு அருகிலுள்ள ஊராட்சிகளை இணைக்க அரசு உத்தரவிட்டு, நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் இணைக்க தீர்மானமும் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
கணக்கம்பாளையம் ஊராட்சியை, உடுமலை நகராட்சியுடன் இணைக்க, 2007 முதல் பொதுமக்கள் போராடி வரும் நிலையில், ஆனால், கடந்த, டிச.,31ல் வெளியிடப்பட்ட அரசு உத்தரவில் இணைக்கப்படாது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, கணக்கம்பாளையம் ஊராட்சி மக்களின் நீண்ட கால பிரச்னையாக உள்ள குடிநீர், பொது சுகாதாரம், ரோடு, தெரு விளக்கு, கழிவு நீர் வடிகால் வசதி போன்ற அடிப்படை தேவைகளுக்கு தீர்வு கிடைக்க, கணக்கம்பாளையம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க வேண்டும், என ஒருங்கிணைப்பு குழு சார்பில், மனு அளிக்கப்பட்டுள்ளது.

