ADDED : ஜன 01, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாநகராட்சி 44வது வார்டு கவுன்சிலர் கண்ணப்பன், மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தியிடம் அளித்த மனு:
குப்பை அகற்றும் தனியார் நிறுவனம் குறைந்த ஊழியர்களை கொண்டு பணிகளை செய்கிறது; உரிய தளவாடங்கள், உபகரணங்கள் இல்லை. சுகாதாரப் பணி தேக்கமடைந்துள்ளது. துாய்மைப் பணி மேற்கொள்ள வேண்டிய மாநகராட்சி நிரந்தர பணியாளர்கள் முறையாகப் பணியாற்றாததால் பூ மார்க்கெட் வளாகத்தில் துர்நாற்றம் வீசுகிறது. சேதமான ரோடுகள், கான்கிரீட் ரோடுகள், சாக்கடை கால்வாய்கள் சீரமைக்க வேண்டும். குடிநீர் குறைந்த பட்சம் 3 நாளுக்கு ஒரு முறை வழங்க வேண்டும்.தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

