/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுழன்றது சிலம்பம்; குவிந்தது பதக்கம்
/
சுழன்றது சிலம்பம்; குவிந்தது பதக்கம்
ADDED : ஆக 01, 2025 07:35 PM

உடுமலை; உடுமலை குறுமைய அளவிலான சிலம்ப போட்டிகள் சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடக்கிறது.
கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறமையை வெளிக்கொணரும் வகையில், விளையாட்டு போட்டிகள் திருப்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.
உடுமலை குறுமைய அளவிலான சிலம்ப போட்டிகள், சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்து வருகிறது. போட்டிகளில் பல்வேறு பள்ளிகளின் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்.
இதில், நேற்று 19 வயதுக்குட்பட்ட ஒற்றை கம்பு வீச்சு சிலம்ப போட்டியில், லுார்துமாதா பள்ளி முதலிடம்; எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பெற்றது.
இரட்டை கம்பு வீச்சு பிரிவில், ஜே.எஸ்.ஆர்., பள்ளி அனிஷ் முதலிடம்; மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பிரவீன்பிரசாத் இரண்டாமிடம்; 70 கிலோவுக்கு கீழ் எடை பிரிவில், எஸ்.கே.பி., ஆகாஷ் முதலிடம்; மாதிரிபள்ளி, நவீன்நிசாந்த் இரண்டாமிடம் பெற்றனர்.
இவ்வாறு, போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர். வெற்றி பெற்றவர்களை, குறுமைய விளையாட்டு போட்டி ஏற்பட்டாளர்கள், கல்வித்துறையினர், உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.

